பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1107] உண்மை அறியா அன்னே சேரன் உலா வருங்கால் அவனை ஒரு பெண் பார்க்கின்ருள். அவன்மீது மால்கொண்டு தன் உள்ளத்தைப் பறி கொடுக்கின்ருள். அவள் சரியாக உணவு உட்கொள்ளுவதில்லை, உறக்கமும் சரியாகக் கொள்ளுவதில்லை. உடலும் இளைத்துவிடுகின்றது ; உடலின்மீது பசலையும் பூக்கின்றது. தனது மகளின் இங்கிலையை உணர்ந்த தாய் அதைப்பற்றிப் பல முதுவாய்ப் பெண்டிரை உசாவுகின்ருள். தெய்வக் கோளாறு தன் மகளுக்கு ஏற்பட்டுவிட்டதோ என்பது தாயின் ஊகம். அவர்கள் வீட்டிற்கு வந்த பலர் பலவிதமாகக் கூறுகின்றனர். ஒருத்தி தெய்வக்கோளாறு ஏற்பட்டிருத்தல் வேண்டும் என்கின்ருள். மற்ருெருத்தி பேய் பிடித்திருக்கவேண்டும் என்று கூறுகின்ருள். இன்னெருத்தி அஃது ஒருவித நோய் என்று உரைக்கின்ருள். இறுதியாக யாவரும் தெய்வக் கோளாறே என்று உறுதிசெய்து வேலனுக்கு வெறியாட்டெடுக்க வேண்டும் என்ற முடிவுக்கு வருகின் றனர். இவற்றையெல்லாம் உள் வீட்டிலிருந்த கங்கை கேட்டுக் கொண்டுதான் இருக்கின்ருள். அடுத்த நாள் முதுவாய்ப் பெண்டிருள் ஒருத்தி கூறியபடி தோட்டத்தில் ஓரிடம் தூய்மை செய்யப் பெற்றுப் புதுமணல் பரப்பப் பெறுகின்றது. அவர்கள் வெள்ளாட்டின் குருதியை அதன்மீது தெளிக்கின்றனர். ஒரு புதுக் குடத்தில் நீர் கிறைத்து அதில் மாவிலே வைத்துக் கும்பமாக்கிச் செபம் செய்வதற்கு ஏற்பாடு ஆகின்றது. அது முடிந்தவுடன் அந்தக் கும்பைேரக் கொண்டு அந்த கங்கையை ரோட்டுதல்வேண்டும். இந்த ஏற்பாடுகளையும் பார்த்துக்கொண்டு தான் இருக்கின்ருள் அந்த கங்கை, இச்சமயத்தில் தோழியொருத்தி அந்த கங்கையிடம் வரு கின்ருள். அவளிடம் கங்கை இவ்வாறு கூறுகின்ருள் ; தோழியே, அதோ பார்த்தாயா என் அன்னையின் செயலை? வெறியாட்டுக்கு