பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I i ; ஆதிரையான் ஒருளில் செல்வத்தில் திளைக்கும் சீமான் ஒருவர் இருந்தார். அவர் அந்த ஊரில் கட்டிய வீடுகள் பல எல்லாம் அவருக்குச் சொந்தமே. அவர் மட்டும் ஒரு தெருவின் கோடியில் உள்ள ஒரு பெரிய வீட்டில் குடியிருந்தார். அவர் பல வீடுகளைக் கட்டினுலும், பல வீடுகளுக்கு அவர் உரியவராக இருந்தாலும் ஊரார் அனை வரும் அவரைக் கோடிவிட்டுச் சீமான் ' என்றே வழங்கி வந்தனர். இதே பெயர் எங்கும் பரவலாயிற்று. இதல்ை அவருக்கு வேறு வீடுகள் இல்லையென்றும் வேறு வீடுகளைக் கட்டவில்லையென்றும் உண்மைக்கு மாருகப் பெறப்படுகின்றன அல்லவா ? இந்த நிலை கவிஞர் ஒருவர் கருத்தில் பட்டது. அதே சமயத்தில் கடவுள் தத்துவத்தைப்பற்றியும் அவர் சிந்திக்கலானர். கடவுள் தத்துவமானது அங்கிங்கெளுதபடி எங்கும் கிறைந்திருப்பது. இந்த உலகும், இந்த உலகிற்கு அப்பாற்பட்ட உலகங்களும் அந்தத் தத்து வத்திலிருந்தே தோன்றின. செவ்வாய், புதன் முதலிய கோள் களையும், விண்ணில் காணப்பெறும் எண்ணற்ற விண்மீன்களையும் ஆதியில் அந்தக் கடவுளே-சிவபெருமானே-படைத்தார். அவர் படைப்பதற்கு முன்னர் இந்த விசும்பு முழுவதும் வெட்டவெளி யாகவே இருந்தது. இங்ங்ணம் எல்லாவற்றையும் சிவபெருமானே படைத்திருந்தும் இந்த அலைகடல்சூழ் உலக மக்கள் அனைவரும் ஒன்றும் அறியாதவர்கள்போல் " திருவாதிரை ” என்ற ஒரு விண் மீனை மட்டிலும்தான் அவர் படைத்தார் என்று சொல்லிக்கொண்டே வருகின்றனர். சிவபெருமான ஆதிரையான், ஆதிரையான்' என்றே வழங்கிவருகின்றனர். ஆதிரை என்ற நாள்மீனும் அவரால் படைக்கப்பெற்ற நாள் மீன்களுள் ஒன்றுதானே. அல்லது ஆதிரை காளில்தான் அவர் பிறந்தாரா? அதுவுமில்லையே. அவர் பிறவாயாக்கைப் பெரியோன்