பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடவுள் வாழ்த்து 影 மீன் என்பதை காளும் மீனும் என்று பிரித்து அவை இரண்டு மின்றிச் செல்வாய் முதலிய கோள்களும் அசுவதி முதலிய விண் மீன்களும் என்து கொள்ளலும் பொருந்தும், மதி-திங்கள் (சந்திரன்) ; கனலி-ஞாயிறு (சூரியன்). கலுைதலைச் செய்வது கனலி ; இது ஞாயிற்றுக்குக் காரணப் பெயர். பெளதிக இயலில் ஒiorie என்று வரும் கலைச் சொல்லுக்குக் கனலி என்ற தமிழ்ச் சொல் பரிதும் பொருந்துவது ஈண்டு உளங்கொள்ளத் தக்கது. என்று என்று அயருமால்-சொல்லிச் சொல்லி ஒரு பெரிய மயக்கத்திலிருக்கின்றது. ஊர் திரை நீர் வேலி-சுருண்டு வருகின்ற அலைகளையுடைய கடல், உலகுஉலகத்தார்; இங்கு ஆகுபெயர்ப் பொருளில் வந்தது. 黨 X ు திருவாதிரை நட்சத்திரம் சிவபெருமானுக்கு உரியது. திங்கள் தோறும் வருகின்ற திருவாதிரையன்று, குறிப்பாக மார்கழித் திங்களில் வருகின்ற திருவாதிரையில், எல்லாச் சிவன் கோயில் களிலுள்ள கடராசரின் கடனவிழாக் கொண்டாட்டம் பல்லாயிரம் ஆண்டுகளாக நடந்தேறி வருகின்றது. மார்கழித் திங்களில் திரு வாதிரையன்று சிதம்பரத்தில் இவ்விழா மிகச் சிறப்பாகக் கொண் டாடப்பெற்று வருவதும் உளங்கொள்ளத் தக்கது.