பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டிய காட்டின் வளம் ; : ரின்றிச் சிதறிக்கிடக்கும். குவிமொட்டு-குவிந்த அரும்புகள். பக்தர் இளங் கமுகு-பந்தல்போல் அகன்று விரிந்து அழகு செய்யும் இளங் கமுகு, திகழ் முத்தம்போலத் தோன்றும்-உண்மையாகவே ஒளிர்ந்து திகழும் முத்துக்களா கவே காட்சி யளிக்கும். தென்னன்-பாண்டியன். நகைமுத்த வெண்குடை யான்-ஒளி விடுகின்ற முத்துச்சரம் தொங்கவிட்ட வெண்கொற்றக் குடை பிடித்த பாண்டியன். செம்மற்று-தலைமையையுடையது; தனிப்பெருமையை உடையது என்றவாறு, செம்மல்-தனிப்பெருமை. செம்மற்றே என்று அந்த கங்கை நாட்டின் சிறப்பை எடுத் தியம்பும் தொனியில்தான் கங்கையின் வாய்மொழியாகக் கவிஞரின் எக்களிப்பும் பாட்டில் கிழலிடுகின்றது. (1)