பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[3] ஊடல் வினேவித்த செயல் நான்குபேர் சேர்ந்துகொண்டால் பொழு துபோக்குப் பேச்சுக்குக் குறைவில்லை. உண்பன, உடுப்பன, கவிப்பன, பூசுவனவற்றிலிருந்து தொடங்கி அகில உலக அரசியல் வரையிலும் பேச்சுக்கள் விரிந்து செல்லும். அறிஞர்கள் கூடினல் உயர்ந்த பொருள்களைப்பற்றிப் பேசுவர். கலைஞர்கள் குழுமினுல் கலைகளைப்பற்றிய பேச்சே நடை பெறும். கூடுபவர்கள் மேற்கொண்டுள்ள அலுவல்களையொட்டிப் பேச்சின் பொருள் அடிக்கடி மாறிக்கொண்டே போகும். ஒரு சிலர்வாழ்வின் அவலக் கவலைகளை மறக்கமுடியாதவர்கள்-பணம், ஊதி யத்திட்டம் முதலியவற்றையே பேசிப் பேசிப் பேச்சின் தரத்தையே குறைத்துவிடுவர். இலக்கியம், தத்துவம், சமயம் போன்ற துறை களில் சர்ச்சை முறையில் நடைபெறும் பேச்சுக்களில் இவர்கள் கலந்துகொள்வதே இல்லை. போகட்டும் ! காதல்பற்றிய பேச்சென்ருல் சொல்லவேண்டியதில்லை. ஆட வர்கள் தனியாகக் கூடியிருக்கும்பொழுதும், மகளிர் தனியாகக் கூடி யிருக்கும்பொழுதும்தான் காதல் பேச்சு தலை நீட்டும். இரு சாராரும் கூடியிருக்கும் கூட்டத்தில் சாதாரணமாகக் காதல் பேச்சு எழுவ தில்லை. அங்ஙனம் பேசுவது நாகரிகக் குறைவு என்று கருதியோ, வேறு என்ன காரணத்தாலோ அதற்குப் பெரும்பாலும் இடம் இருப்ப தில்லை. ஒரு சமயம் நெடுமாடக்கூடலேப்பற்றி மகளிரிடையே பேச்சு கடையெ றுகின்றது. மதுரைமாககரத்துத் தெருக்களைப்பற்றிப் பேசு கின்றனர். குழாயில் தண்ணீர் சரியாக வராததைப்பற்றிப் பேச வில்லை. தெருக்கள் ஒழுங்காகப் பெருக்கப்பெறுவதில்லை என்றும் பேசவில்லை. கொசுக்களின் தொல்லைகளைப்பற்றியும் பேசவில்லை. (இந்த கிலே அக்காலத்தில் இல்லை! அப்படியாளுல், அவர்கள் எதைப்பற்றித்தான் பேசுகின்றனர்?