பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 ஊடல் விளைவித்த செயல் # " தெருக்களின் இருபுறங்களிலும் சாளரம் வைக்கப்பெற்றுள்ள மேன் மாடங்கள் உள்ளன. காதலர்கள் தங்கள் காதலிமாருடன் கொஞ்சிக் கொஞ்சிப் பேசுகின்றனர். காதலிமாரோ ஊடலில்-சிறு பிணக்கில்-கிற்கின்றனர். அதை எங்ஙனம் தணிப்பது? நறுமண நீரில் (பன்னீர்) கரைக்கப்பெற்ற நறுக் சாந்தைக் (சந்தனத்தைக்} கொண்ட கிண்ணங்களுடன் நெருங்குகின்றனர்; சிலர் தந்த நறுஞ் சாந்தில் குங்குமப்பூவும் சேர்ந்துள்ளது. அத்தகைய சாங்தினைத் தம் காதலிமார் மார்பில் பூசி மகிழ எண்ணுகின்றனர். மகளிரோ இருந்த ஆத்திரத்தில் கிண்ணங்களைப் பறித்துச் சாளரங்களின் வழியாகத் தெருக்களில் விட்டெறிகின்றனர். தெருக்கள் முழுவதும் ஒரே சந்த னச் சேறு மயம் ! அத் தெருக்களின் வழியாகப் போவோரும் வரு வோரும் வழுக்கித் தடுமாறி விழுந்தெழுந்து செல்லுகின்றனர். நெடுமாடக் கூடலின் நீள்வளம் இப்படிப்பட்டது' என்று பேசிக் கொள்ளுகின்றனர் . கூடல்மா நகரைப்பற்றி எண்ணிய கவிஞரின் உள்ளத்தில் இக் காட்சி எழுகின்றது. உடனே அதற்குப் பாட்டு வடிவமும் தருகின்ருர்: மைந்தரோடுடி மகளிர் திமிர்ந்திட்ட குங்கும வீர்ஞ்சாந்தின் சேறிழுக்கி-விங்குத் தடுமாற லாகிய தன்மைத்தே தென்னன் நெடுமாடக் கூட லகம். இது நகர் வனங் கூறுவது. விளக்கம் மைந்தர் - இளைஞர். மைந்து வலிமை. ஊடி - சிறு பிணக்குக் கொண்டு. ஊடல் சிறு பிணக்கு திமிர்ந்திட்ட - சிதறிவிட்ட, வீசியெறிந்த, குங்கும ஈர்ஞ்சாந்தின் சேறு - குங்குமப்பூ சேர்ந்த சந்தனச் சேறு இழுக்கி - வழுக்குதலால் தடுமாறல் - சறுக்கி விழுதல். கெடு மாடம் உயர்ந்த மாளிகை, கூடல் - மதுரை. - (2) (பா. வே. 7. சேறுழக்கி , ! 9. லாகாத.