பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்தக் காலத்தில் ஒரு பேரரசின் கீழ்ப் பல சிற்றரசுக்கள் அடங்கி இருக்கும். தாம் அவ்வாறு அடங்கி யிருப்பதற்கு அறிகுறி யாகச் சிற்றரசுக்கள் பேரரசுக்குத் திறை-கப்பம்-செலுத்திவருதல் வழக்கம். யாதாவது ஒரு சிற்றரசு கப்பப்பொருளை அனுப்பத் தவறி ஞல் பேரரசு அச்சிற்றரசின்மீது தண்டெடுத்துச் சென்று அதனை ஒறுத்து அடக்கும். இது அந்த நாளைய நடைமுறை. இது கவிஞ ருக்கு நன்கு தெரியும். பாண்டிய அரசு பேரரசாகத் திகழ்ந்த காலத்தில் பல சிற்றரசுக் கள் கப்பம் செலுத்தி வந்ததைக் கவிஞர் கன்கு அறிவார். ஒரு சமயம் சிலர் கப்பப் பொருள்களைச் செலுத்தத் தவறிவிட்டனர். பேரரசு அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கவேண்டியதுதானே. இராணுவ வீரன் ஒருவன் திறை செலுத்தாத குறுகில மன்னர்களிடம் தூதாக அனுப்பப்பெறுகின்றன். சென்றவன் தனது அரசின் ஆணையின் சிறப்பையும் அதன் வேகத்தையும் கூறி அவர்களை எச்சரிக்கை செய்கின்றன். தேவர்களும் எங்கள் அரசின் ஆணைக்கு அஞ்சி நடுங்கும்போது நீங்கள் எம்மாத்திரம்?’ என்று எடுத்தியம்பு கின்றன். இந்த நிலையை ஒரு சமயம் கவிஞர்காண நேரிடுகின்றது. ஒருநாள் கவிஞர் தனியாக இருக்கும்பொழுது பாண்டியனின் ஆண நினைவுக்கு வருகின்றது. ஆணையைப்பற்றிய சிந்தனையில் ஆழ்கின்ருர், கவிதை யொன்று உருவாகினறது. திறைப்பொருள் தராத குறுநில மன்னர்களிடம் தூதாகச் சென்ற படை வீரன் அவர் களை எச்சரிக்கை தரும் பாணியில் பாட்டு வடிவம் பெற்று விடு கின்றது.