பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[5] பாண்டியனின் வென்றி மேம்பாகு செட்டி நாட்டில் வாழும் தன வணிக மரபினருக்கும் மற்றைய ஒருசில மரபினருக்கும் மலேயா, சிங்கப்பூர், பர்மா முதலிய தொலைவி லுள்ள காடுகளுடன் வாணிகத் தொடர்பு உண்டு. ஆதலால் அவர் கள் அடிக்கடி அந்த நாடுகளுக்குப் பெரும்பாலும் கப்பல் மூலம் பிரயாணம் செய்வர். ஒரு சிலர்மட்டிலும் அவசரத்தின் பொருட்டுச் சில சமயங்களில் விமானத்தின்மூலம் செல்வர். கப்பலில் செல் வோருள் சிலர் சென்னைத் துறைமுகத்தில் கப்பல் ஏறுவர்; சிலர் காகப்பட்டினத் துறைமுகத்தில் கப்பல் ஏறுவர். கப்பல் நல்ல நாள் பார்த்தா புறப்படும்? அது பிரயாணத்திட் டப்படி, கப்பல் கம்பெனியாரின் செளகர்யப்படி, குறிப்பிட்ட நாள் களில் செல்லும், ஆளுல், பெரும்பாலும் செட்டி நாட்டுப் பகுதிகளி லிருந்து கப்பல் பிரயாணம் செய்து தொலே நாடுகட்குச் செல்கின்ற வர்கள் கல்லநாள் பார்த்தே பிரயாணத்தைத் தொடங்குவது வழக்கம். கப்பல் புறப்படும் நாளுக்கு முன்னதாகவே ஒரு நல்ல நாளில் தம் சொந்த வீட்டை விட்டுப் புறப்பட்டு ஒரு நெருங்கிய உறவினர் வீட்டுக்குச் சென்று அங்குத் தங்கிவிடுவர் : அல்லது தமது மரபினர்க் கென்று கட்டப்பெற்ற ஒரு பொது விடுதியில் தங்கிவிடுதலும் உண்டு. அவ்விடத்திலிருந்து கொண்டே தாம் கப்பலேறும் வரை தம் உள் நாட்டு அலுவல்களைக் கவனித்துவருவர். இந்த வழக்கம் செட்டி நாட்டுப் பகுதியில் இன்றும் நடைமுறையில் இருந்து வருகின்றது. மேற்குறிப்பிட்டதைப் போன்றதொரு வழக்கம் அக்காலத்தில்தமிழ் மன்னர்கள் தரணியை ஆண்ட காலத்தில்-இருந்து வந்தது. ஓர் அரசன் மாற்றரசனேடு தண்டெடுத்துச் சென்று போர் செய்து வெல்வதற்கு ஒரு கன்னுள் பார்த்துப் புறப்படுவ தென்பது நடைமுறை யில் மேற்கொள்ளமுடியாத தொன்று. அதனல் அந்த அரசன் தன்