பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டியனின் வென்றி மேம்பாடு 17 குடையையோ, வாளையோ அல்லது கொடியையோ ஒரு நல்ல காளில் ஒரு குறித்த ஒரையில் பட்டத்து யானையின்மீது வைத்துப் போக்கி வேறு இடத்தில் வைப்பது வழக்கம். பிறகு அரசன் போர் செய்யச் செல்வான். குடையை ஓர் அரசன் அனுப்பினல் அது குடைநாட் கோள் என்று வழங்கப்பெறும். இத்தகைய வழக்கத்தைக் கவிஞர் நன்கு அறிவார். பாண்டியனின் ஆட்சி பல்வகைச்சிறப்புக்களுடன் ஓங்கியிருந்த காலம் அது. எத்தனையோ யாண்டுகள் போரின்றிக் கழிகின்றன : குறு கில மன்னர்கள் இங்கிலையை எண்ணிப் பார்க்கின்றனர். இனிமேல் நாம் திறை செலுத்துவதை நிறுத்திவிடுவோம். பாண்டியன் என்ன தான் செய்வான் என்று பார்ப்போமே" என்று இறுமாந்து ஆணவத் டன் இருந்து விடுகின்றனர். மாறன் இங்கிலையை உணர்கின்ருன்; அவர்கள்மீது சீற்றங்கொள்ளுகின்ருன். திறை செலுத்த மறுப்பது மன்னிக்கமுடியாத குற்றமல்லவா ? குடை ாேட்கோளுக்கு ஆணை பிறப்பிக்கின்றன். ஒரு நல்ல நாளில் ஒரு கல்லோரையில் படை வீரர்கள் மலைபோன்ற பெரிய பட்டத்து யானையின்மீது அரசனின் வெண்கொற்றக் கொடையைத் தோன்றவைத்துக் கொட்டு முழக்கத் துடன் புறப்படுகின்றனர். இச் செய்தி ஒற்றர்கள் மூலமோ-அல்லது வேறு எப்படியோமாற்றரசர்கட்கு எட்டி விடுகின்றது. அவர்கள் குலை நடுக்கம் கொள் கின்றனர்; சிம்ம சொப்பனம் காண்கின்றனர் ஐயோ, குடை நாட்கோளா? அஃது எங்கள் வாழ்நாட்கோளாக அல்லவா முடியும்?" என்று உளறியடித்துக்கொண்டு திறைப்பொருள்களுடன் 'நீ முந்தி, நான் முந்தி' என்று பாண்டியனின் அரண்மனை வாயிலில் வந்து திரண்டு விடுகின்றனர்; இருப்பதற்குக் கூட இடம் போதாது திண் டாடுகின்றனர். மன்னவோ, திறையைப் பெற்றுக்கொண்டு எங் கட்கு உயிர்ப்பிச்சை அருள்வாயாக. உன் கீழ் அடியராய் வாழும் எம்மீது தண்டெடுத்துப் போர் தொடுக்க எண்ணுவது முறையோ?” என்று முறையிடுகின்றனர். இந்தக் காட்சியையும் கவிஞர் கண் ணுறுகின்றர். 2