பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 முத்தொள்ளாயிர விளக்கம் இவர்களைக் கண்டு வெருவியோடுகின்றன. அவ் விலங்குகளின் காற்குளம்புகள் பட்ட இடங்களில் மணிகள் பெயர்ந்து ஒளியொடு மிளிர்கின்றன. பகைவர்கள் அந்த இடங்களையும் கடந்து சென்று மறைகின்றனர். அப்படியும் அவர்களைத் திகில் விட்டபாடில்லை. உள்ளம் நெருப் பாகின்றது. வயிற்றில் நெருப்பை வாரிக்கட்டியது போன்ற நிலை அவர்கட்கு ஏற்படுகின்றது. வயிற்றில் ஒரே எரிச்சல் : மனக் கொதிப்போ தாங்கமுடியவில்லை. இந்த இடங்கட்கும் பாண்டியனின் படை வீரர்கள் வந்து தம்மைக் கண்டு பிடித்துவிட்டால் என்ன செய் வது என்று பயந்து சாகின்றனர்; உயிர் உடலில் கின்று ஊசலாடு கின்றது. மாற்றரசர்களின் மன நிலையைச் சிந்திக்கின்ருர் கவிஞர். பாண்டியனின் படைகள் எயில்கொண்டதையும் எண்ணுகின்ருர்; எயிலிடத்தில் முழங்கப்பெறும் வெற்றி முரசின் ஒலி மலைச்சரிவு களில் எதிரொலித்துக்கொண்டே சென்று பகையரசர்கள் ஒளிங் திருக்கும் இடத்தை அடைந்து அவர்கள் காதில் விழுவதையும் கருதுகின்ருர். உடனே அவர் உள்ளத்தில் ஒரு கவிதை உருவாகி அது நல்ல வடிவத்தையும் பெற்றுவிடுகின்றது. இதோ அந்தப் பாடல்: செருவெங் கதிர்வேற் சினவெம்போர் மாறன் உருமி னிடிமுர சார்ப்ப-அரவுறழ்ந் தாமா வுகளு மணிவரையி னப்புறம்போய் வேமால் வயிறெரிய வேந்து இது பாண்டியனின் படை மாற்றரசர்களின் எயில் கோடலைக் கூறியது. விளக்கம் : செரு - போர். செருவெங் கதிர்வேல் - போர் செய்வதற் கான கூரிய வேல். சினம் - கோபம். சினவெம்போர் மாறன் - பொங்கி யெழும் கோபத்துடன் போர் புரியும் பாண்டியன். வெம்போர் - கொடும போர். வெம்மை - வெப்பம். உரும் இடி, உருமின் இடி முரசம் ஆர்ப்ப (பா வே) 8. உருவுறழ்ங். ---