பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[7] பொன்னுரைத்த கல் பெரும்போர் ஒன்று நடை பெ றுகின்றது. மாறனைப் பல பகைப் புல மன்னர்கள் ஒருங்குசேர்ந்து எதிர்க்கின்றனர். பாண்டியன் படை பல மிக்கவன். வேற்படை, யானைப்படை, குதிரைப்படை ஆகியவை அவனிடம் அதிகமாக உள்ளன. பாண்டியனும் பேராற்றல் மிக்க வன்; போர் புரிதலிலும் மிக்க திறமுடையவன். போர் மிகக் கடுமையாக நடைபெறுகின்றது. முதலில் பாண்டி யனுடைய வேற்படைகள் அணி அணியாகச் சென்று மாற்றரசரின் படைகளைத் தாக்குகின்றன. அடுத்து அவனுடைய குதிரைப்படைகள் மாற்றரசர்களின் யானைப்படைகளின்மேற் சென்று மோதுகின்றன. யானைப்படைகளால் இத்தாக்குதலைச் சமாளிக்க இயலவில்லை. யானை கள் கழுத்தை நிமிர்த்துக்கொண்டு அங்கு மிங்குமாகத் திரும்பி அல மருகின்றன. குதிரைகளோ சும்மா இருக்கவில்லை. யானைகளின் கழுத்தடியில் மோதிப் பாய்கின்றன விடாது மேலும் மேலும் பாய்ந்த வண்ண மிருக்கின்றன. கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையு மன்ருே ? குதிரைகள் தொடர்ந்து மோதுதலால் யானைகளின் கழுத் துக் கயிறுகள் அறுந்து போகின்றன. அந்தக் கழுத்துக் கயிற்றின் அடியில் காலை நுழைத்துக்கொண்டிருக்கும் மாற்றரசர்கள் கீழே உருண்டு விழுகின்றனர். அவர்கள் தலையிலணிந்துள்ள பொன்முடி கள் நாற்புறங்களிலும் சிதறியோடுகின்றன. குதிரைகளும் அம்முடி களைத் தம் கால்களால் எற்றி இடறிக்கொண்டுமேற்செல்லுகின்றன. இவ்வாறு தொடர்ந்து குதிரைகள் பல்வேறு மன்னர்களின் பொன் முடிகளை இடறி இடறிக் கம்பீரமாக மேற் செல்லுவதால் அவைகளின் காற்குளம்புகள் பொன்னுரைத்த கட்டளைக்கல்போல் ஒளிர்கின்றன. போர்க்கள நிலையைக் கவிஞர் சிந்திக்கின்ருர், குதிரைப்படை களின் செயல் அவருடைய மனக்கண்முன் வந்து கிற்கின்றது. அதனையே பொருளாகக்கொண்டு பாடலும் உருவாகி விடுகின்றது.