பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{9} இரண்ரு கொம்புகள் எதற்கு? கிடலையொத்த பாண்டியனது படைகள் மாற்ருர் மதிலை முற்றுகையிடுகின்றன. பாண்டியனுடைய மலைபோன்ற யானையைக் கண்டவுடன் பகைவர்களுக்குப் பெருத்த அச்சம் ஏற்படுகின்றது. கதவை அடைத்துக்கொண்டு கோட்டைக்குள்ளேயே இருந்து விடு கின்றனர். அடிக்கடிப் போரில் ஈடுபட்டு ஈடுபட்டு யானைக்கும் பகைவர் களின் கைவரிசை கன்கு பழக்கமாகி விடுகின்றது, பகைவர்கள் மதில் வாயில் மூடியதைக் கண்டதும் யான பெருஞ்சினம் கொள்ளு கின்றது. வாயிலை நோக்கி விரைந்து செல்லுகின்றது. ஒரு கோட் டால் கோட்டைவாயிலேத் தகர்த்தெறிகின்றது : மற்றெரு கோட் டால் பகைவருடைய மார்பைப் பிளந்து விடுகின்றது. வாரணத்தின் இரு கோட்டின் செயல்களையும் காண்கின்றர் கவிஞர். இக் காட்சி யைச் சிந்திக்கின்ருர். அ. து அழகிய பாடலாக உருப்பெறுகின்றது. யானைக்கு இரண்டு மருப்புக்கள் எதற்கு என்ற விைைவத் தாமாக எழுப்பிக்கொள்ளுகின்ருர், அதற்குக் காரணங்களையும் கற்பிக்கின்ருர், பகைவரின் கோட்டைவாயிலைத் திறக்க துணையாக அமைகின்றது ஒரு மருப்பு மற்ருெரு மருப்பு பகைவரது மார்பைப் பிளக்தெறியப் பயன்படுகின்றது. ஒன்று, கோட்டை வாயிற் கதவின் திறவுகோலாகப் பயன்படுகின்றது ; மற்ருென்று, பகைவரிடன் மார் பாகிய வயலை உழும் கலப்பையாகச் செயற்படுகின்றது. இந்த முறை யில் பாட்டும் வடிவம் பெற்றுவிடுகின்றது.