பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யானைக்கும் நாணம் ! 3 : கவிஞரின் உள்ளத்தில் உருப்பெற்ற பாடலைக் காண்போம்: கு f அடுமதில் பாய வழிந்தன கோட்டைப் பிடிமுன் பழகழிதல் நாணி - முடியுடை மன்னர் குடரால் மறைக்குமே செங்கனல்வேற் றென்னவர் கோமான் களிறு. விளக்கம் : அடு மதில் தன்பால் கெருங்கி வருவோரை அழிக்கும் பொறியமையப்பெற்ற மதில்; யானை அழிக்கத்தொடங்கிய மதில் எனவும் அமையும். அழிந்தன கோட்டை முறிந்துபோன கொம்புகளே. கோடு . கொம்பு. பிடி - பெண் யானே. பிடி முன்பு அழகு அழிதல் காணி - முறிந்த கொம்புகள் அழகினை இழந்தமையால் பெண் யானை தன்னை இழிவாகக் கருதுமே என்று வெட்கி. இவ்வாறு கூறுதல் தற்குறிப்பேற்ற அணி, மறைக்குமே முறிந்து சேதப்பட்ட தந்தங்களை மறைக்கும். செம் கனல் வேல் - செம்மையை உமிழும் வேலைக் கொண்ட, தென்னவர் கோமான் . பாண்டியன். களிறு - ஆண் யானே. மேகநாதனைக் கொன்ற இலக்குவன் மேகநாதனின் தலையுடன் சென்று இராமனைக் காண்பதுபோல் ஆண் யானே பகைவரின் குட லுடன் தன் பிடியைக் காணப் புறப்பட்டுவிடுகின்றது. (10) (பா வே. 1. அடிமதில்: 3. வழிந்ததன்; 10. குடைய ல்,