பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போர்க்களக் காட்சி 33 அந்த கரிக்கூட்டத்தில் ஒரு கரி மட்டும் சற்றுத் துணிவு கொண்டு முன் நோக்கி வருகின்றது. வருங்கால் தன்னுடன் துணைக்கு வருமாறு வேருெரு கரியை அழைக்கின்றது. ஆயினும், அதுவும் அச்சத்தாலும் முழுத்துணிவின்மையாலும் அருகில் நெருங் கிப்போக இயலாமல் தவிக்கின்றது. என்னதான் கூவியழைத்தும் துணைக்கு ஒரு கரியும் வரவில்லை : கூவியழைத்ததுதான் மிச்சம்! இக்காட்சியை எடுத்துரைக்கும் கவிஞரின் பாடலைக் క్లిక్ట్రి! கு ওঁঠ காண்போம்: வெருவரு வெஞ்சமத்து வேலிலங்க வீழ்ந்தார் புருவ முரிவுகண் டஞ்சி-நரிவெரீஇச் சேட்கணித்தாய் நின்றழைக்குஞ் செம்மற்றே தென்னவன் வாட்கணித்தாய் வீழ்ந்தார் களம். இது களம் உரைத்தது. விளக்கம் : வெருவரு அஞ்சத்தக்க. வெஞ்சமம் - கொடிய போர். இலங்க . விளங்க. புருவ முரிவு சினத்தால் ஏற்படும் புருவ வளைவு. அஞ்சி - பயந்து. வெரீஇ கடுங்கி, சேட்கணித்தாய் - சேண் இடத்ததாய். இங்கு சேண் தூரம்; கண் இடம். கணித்து குறிப்பு வினைமுற்றுப் பொருளில் வந்தது. வாட்கணித்தாய் - வாளுக்கு அணித்து ஆய் , வாளி டத்து ஆய் எனலும் பொருந்தும். சேய்த்தணித்தாய் என்ற பாடத்தைக் கொண்டால் சேய்மையிடத் ததும் அண்மையிடத்ததும் என்று பொருள்படும், இறந்து கிடக்கும் வீர னுடைய பக்கத்திற்குப் போன கரி தொலைவிலுள்ள ஒரு கரியைத் துணைக்கு அழைக்கின்றது. ஆனால், தொலைவில் கிற்கும் கரி வேண்டாம், போகாதே! என்று வீரன் பக்கத்திற்குப் போய் கிற்கும் கரியைக் கூவுகின்றது. இப்படி யாக ஒன்றையொன்று மாறி மாறிக் கூவுகின்றது என்று பொருள் கொள்ள வேண்டும். . இப் பாடல் மீட்டும் மீட்டும் நாம் படிக்கும்பொழுது நம்மிடமும் அச்சச்சுவை எழுவதைக் காணலாம். (11) {பா வே. 9 சேய்த்தணித்தாய். 3