பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[13] களிற்றினத்தின் சோக உணர்ச்சி ஆலிங்கப்போருக்குப் பிறகு அசோகச் சக்கரவர்த்தி கிலையாமை உணர்ச்சி மேலிட்டு மனகிலே மாறிப் புத்த சமயத்தில் ஈடுபட்டார் என்று வரலாறு கூறுகின்றது. போரில் ஒரு பக்கத்திற்கு நிச்சயம் வெற்றி கிடைக்கின்றது என்பது உண்மைதான். கூர்ந்து நோக்கி ல்ை அந்த வெற்றி, துயரத்தில் தோய்ந்தே கிடப்பது புலகுைம். ஒரு சமயம் பாண்டியன் பகை வேந்தர்களுடன் போர் புரிய கேர் கின்றது. அதில் களிற்றியான கிரைகள் ஏராளமாக அழிந்து படுகின்றன : அவை யாவும் பகையரசர்கட்குச் சொந்தமானவை. அங்ங்ணமே பகை மன்னர்களும் பலர் வீழ்ந்து மடிகின்றனர். இறுதி யில் பாண்டியனுக்கு வெற்றி கிடைக்கின்றது. இப்பொழுது போர்க் களத்தில் அமளி குறைந்து அமைதி கிலவுகின்றது. - பாண்டியனின் படை வீரர்கள் வீடு திரும்பிக்கொண்டிருக்கின் றனர். பாண்டியனும் நகரை நோக்கி விரைகின்றன். அங்கனம் வந்து கொண்டிருக்கும்பொழுது சோகக்குரல் அவனது காதில் விழு கின்றது; அவலககாட்சியும் அவனது கண்ணில் படுகின்றது. ' எங் கணவர் கிடந்த இடம் எங்கே? எங்கே?' என்று பகைவர்களின் மனை வியர் தேடித் திரிகின்றனர். அவர்கள் உடல்களைக் கண்டதும் அவற் றிற்கு எரி மூட்டித் தாங்களும் காந்தருடன் அந்தக் கனல் அமளியில் புகுந்து கற்பினை நிலைநாட்டுகின்றனர். இக் காட்சியைக் காணும் பாண்டியனின் உள்ளம் உருகுகின்றது ; அவல்ை தன் சோக உணர்ச்சியைத் தாங்கமுடியவில்லை. ஆகவே, அவன் தன் மேலாடை யின் முன்ருனேயால் தன் கண்களை மூடிக்கொள்ளுகின்ருன். இன்னெரு பக்கம் மற்ருெரு சோகக் காட்சி தென்படுகின்றது. பகைவர்களின் களிறுகள் இறந்ததால் அவற்றின் பிடிகள் பொலி விழந்து புலம்புகின்றன. இந்தச் சோகம் நிறைந்த காட்சியைக் காணும் பாண்டியனின் களிறுகளும் அதைப் பார்க்கச் சகியாமல் தம் கண்களை மூடிக்கொள்ளுகின்றன.