பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[14] ஒகை உயர் மாடத்தில் கூகை! பாண்டியனின் பகைப் புல வேந்தர்கள் பல்லடுக்கு அரண் மனைகளில் ஆடம்பரமாகத்தான் வாழ்ந்தனர்; செல்வச் செருக்கில் திளைத்தனர். அவர்களும் மற்ற அரசர்களை வென்று வாகைமாலை சூடி வந்தவர்கள்தாம்: வாகை மாலை சூடி அரியணையில் வீற்றிருக் கும்பொழுது எத்தனையோ களியாட்டங்கள் நடைபெற்றன. மகிழ்ச்சி யின் அலைகள் எம்மருங்கும் கொந்தளித்தன. அவர்கள் வாழ்ந்த இடங்கள் ஒகை உயர்மாடங்களாகப் பொலிந்தன . . இன்று அவற்றின் கிலே என்ன? பாண்டியனுக்குப் பணியாது அவனேடு வீகைப் போரிட்ட காரணத்தால் அவர்கள் யாவரும் மடிந்து மண்ணுேடு மண்ணுய் மக்கி மறைந்து விட்டனர். அவர்கள் அரசிருந்து வாழ்ந்த மேன் மாடங்களில் இப்பொழுது கோட்டான்கள் குடியிருக்கின்றன , ஆந்தைகள் அலறுகின்றன. அம்மாடங்களில் வாழும் கிழப்பேய்கள் உறங்குவதற்காகக் கூகைகள் பாட்டயர்கின் றன : கூவுகின்றன. பகைப் புலக்காட்சியைக் காணும் கவிஞர் அங்கிலையை அழகிய சொல்லோவியமாகத் தீட்டுகின்ருர், அந்தப் பாடலைப் பார்ப்போம்: வாகை வனமாலை சூடி யரசுறையும் ஒகை யுயர்மாடத் துள்ளிருந்து-கூகை படுபேய்க்குப் பாட்டயரும் பண்பிற்றே தென்னன் விடுமாற்றங் கொள்ளாதார் நாடு. * sur - Gal.) 6 ைேறமாயத் 15 வீடு. இப்பாடல் 66-ஆம் பாடலுடன் ஒப்பிடுக.