பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4篡 வீரத்திற்கு முன்னர் சோகம் இனி, பாடலைக் கண்போம்: கொடித்தலைத்தார்த் தென்னவன் தோற்ருன்போல் நின்ருன் மடித்தவாய் சுட்டிய கையாற்-பிடித்தவேற் கண்னேரா வோச்சிக் களிறணையாக் கண்படுத்த மண்னேரா மன்னரைக் கண்டு. இது பாண்டியனின் வென்றியின விளம்புவது. விளக்கம் கொடித்தலைத்தார் - உச்சியில் வெற்றிக்கொடி கட்டிய வேலாயுதத்தையுடைய. தென்னவன் - பாண்டியன். தோற்ருன்போல் - வென்றும் வெல்லாதது போல். தேற்ருன்போல் என்பது பாடமாயின், தெளியாதவன் போல், அஃதாவது ஒன்றும் புரியாதவன் போல் என்று பொருள் கொள்க. சுட்டிய கையால் பிடித்த வேல் - குறி பார்த்து கையிற் பிடித்த வேல். கண் நேரா ஒச்சி எதிரியின் கண்ணுக்கு நேராக ஓங்கி, களிறு அணையா யானையே சாய்வதற்கேற்ற பொருளென அறிந்து கண்படுத்த கண் மூடிக் கிடந்த இத்தகைய பெருவீரன் இறந்தும் இறவாதவன் ஆகலின், இறந்த' என்னது, கண்படுத்த துங்க என்று கூறியுள்ள நயம் உணர்ந்து மகிழத் தக்கது. மண் நேரா - மண்ணை அடையாத. போர்க்களத்தில் பகை மன்னர் பட்டிறந்ததையும் பாண்டியனது முழு வெற்றியினையும் பட்டவர்த்தனமாக எடுத்துக் காட்டுகின்றது இப்பாட்டு. அத்துடன் பகைவரின் வீரத்தைப் பாராட்டும் பண்பு பாண்டியனிடம் இருப்பதையும் புலனுக்குகின்ருர் கவிஞர். (15) (பா - வே. கொடுத்தலத்தார்த்; 3 தேற்ருன்போல்; 1 களிறனயாற்.