பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[17յ சினம் போக்கும் மருந்து ரு சமயம் அறிவின்மையால் ஒரு சில அரசர்கள் பாண்டி யனை எதிர்த்துப் போர்புரிய வந்து விடுகின்றனர். ஆழக் தெரியாமல் காலை விட்டு மாட்டிக்கொள்வது போல், போர் செய்து வெற்றிபெற முடியாது அவர்கள் திண்டாடுகின்றனர். எப்படியாவது தப்பிப் பின் வாங்கிவிடலாம் என்ற எண்ணங்தான். என்ன செய்வது? பாண்டியன் வீண் போர் புரியான் வந்து விட்ட போரையும் விடமாட்டான். வெற்றி காணும்வரை மெய்வருத்தம் பாரான் , பசி நோக்கான் ; கண் துஞ்சான். இது பாண்டியனின் மறப் பண்பு. இந் நிலையில் பாண்டியனின் பண்பினைக் கேள்வியுற்ற ஒருவன் அவ்வரசர்கட்கு யோசனைகூற முன் வருகின்ருன். பகைவர் சார்பி லுள்ள ஒருவனை நோக்கி இவ்வாறு பேசுகின்ருன் தென்னவன் இன்னும் சீற்றம் தணிந்தவளுகத் தெரியவில்லை. அறியாமையில்ை கிளப்பி விடப்பெறற சினத்திற்கு மருந்தும் உண்டு. சினம் பொங்கும் அவன் கண்ணிலுள்ள சிவப்பைப் போக்க வேண்டுமாயின் உங்கள் மன்னர்களின் தேவிமார் தம் மக்களை இட்டு வந்து அவன் முன் கிறுத்தி மண் இரத்தல் செய்யவேண்டும். இல்லை யெனில், அவர்கட்கு மண்ணுலகில் வாழ்வில்லை. விண்ணுடு ஏக வேண்டு யதுதான் என்று பெரியோர் கூறுவர் ' என்கின்ருன். இந்த நிகழ்ச்சிகளைக் கவிஞர் தனது அரிய சொல்லோவியத் தால் மிக அழகாகப் பெற வைக்கின்ருர், இனி, பாடலைப் பார்ப்போம்: தொழில்தேற்ருப் பாலகனே முன்னிறீஇப் பின்னின் றழலிலவேல் காய்த்தினுர் பெண்டிர் - கழலடைந்து மண்ணிரத்த லென்ப வயங்குதார் மாமாறன் கண்ணிரத்தந் தீர்க்கு மருந்து. (பா வே.) 9. மண்ாகத்தல்; 13 கண்கத்தல்.