பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சினம் போக்கும் மருந்து 43 இதுவும் பாண்டியனின் வென்றியினை விளக்குவதுவே. விளக்கம் : தொழில் தேற்றப் பாலகனை - எச்செயலையும் தாகுக உணர்ந்து மேற்கொள்ளத் தெரியாத விளையாட்டுப் பருவத்திலுள்ள சிறுவன, முன்கிறீஇ - முன்னுல் கிற்கச் செய்து, பின்கின்று - பின்னல் தாம் (தாய் மார் கள்) கின்று. அழல் இலைவேல் காய்த்தினர் - கெருப்புப்போல் ஒளிர்கின்ற இலை வடிவமைந்த வேலுக்குச் சீற்றத்தை உண்டாக்கினவருடைய. பெண் டிர் - மனைவியர். கழல் அடைந்து காலில் விழுந்து மண் இரத்தல் - மண் ணுலக வாழ்வு வேண்டும்' என்று வேண்டி கிற்றல். தார் - மாலை. கண்ணி ரத்தம் - கண்ணிலுள்ள சிவப்பு ; சிவப்பு சீற்றத்தைக் குறிக்கும். 'கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள என்று தொல்காப்பியம் கூறும். இது தென்னவனின் கருணையை எடுத்துக் காட்ட வந்த பாட்டு. விளையாட்டுச் சிறுவன் செய்யும் செயல் யாரையும் உருக்கி விடும். பாண்டியன் அதற்கு உருகுவது உறுதி. (16)