பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[18] பாண்டியனுக்குப் பாமாலே iெlய்யுணர்வு பெற்ற பெரியோர்கள் பண்டிருந்து இன்று வரை இரண்டு உண்மைகளை வலியுறுத்தி வருகின்றனர். ஒன்று, மெய்ப்பொருள் உண்மை ; அதாவது கடவுள் இறுதியில்லாத இட மெங்கும் பரவி நிற்கின்ருன் என்பது. மெய்ஞ்ஞானச் செல்வர்கள் யாவரும் இந்த உண்மையில் திளைத்துக் களித்தவண்ண மிருக்கின் றனர். மற்றென்று, வழிபாட்டுக்குரிய உருவத்தில் ஈடுபட்டு, 'மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மானிலத்தே' என்று கூறுமளவுக்குப் பேரானந்தம் கொள்ளுவது. உலகிலுள்ள எல்லாச் சமயங்களிலும் இந்த இரண்டு செய்திகள் அமைந்திருப்பதைக் காணலாம். பண்டைத் தமிழர்கள் முதலில் குறிப்பிட்ட உண்மையிலும் இரண்டாவதாகக் குறிப்பிட்ட அடையாளத்திலும் தம்மைப் பறி கொடுத்து அவற்றை நன்கு அனுபவித்திருக்கின்றனர். இந்த இரண்டும் அடங்கியது முருகன் வழிபாடு. பண்டிருந்து இன்று வரை இந்த வழிபாடு தமிழர்களின் இதயத்தைக் கொள்ளை கொண் டிருக்கின்றது. எல்லே காணுத நீலவானத்தை நீலத்தோகை விரித்தாடும் மயில் என்றும், வானம் எங்கும் நீக்கமற நிறைந்திருக் கும் கடவுள் உண்மையை முருகன் என்றும் உருவகப் படுத்தினர் பண்டையோர். இந்த உருவத்தின்மீது ஈடுபட்டு அடியார்கள் பாடியருளிய பாடல்கள் எண்ணிறந்தவை. எடுத்துக்காட்டு: பணிப்பகை மயிலும் சேவற் பதாகையும் பன்னி ரண்டு மணிக்குழை களுமோ ராறு வதனமும் வாகை வேலுந்

  • முருகன் வழிபாட்டைப் பற்றிய செய்திகன் 'முருகன் அல்லது அழகு" (திரு.வி.க.) என்னும் நூலால் ஓரளவு விரிவாக அறியலாம்.