பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[19] மாறன் அடிமிசைமாற்றரசர்களின் மலர்கள் ஒரு சமயம் பாண்டியன் அமைச்சர் தானத் தலைவர் முதலியோர் புடைசூழ அத்தாணி மண்டபத்தில் கொலுவீற்றிருக்கின்ருன். பல சிற்றரசர்கள் அவனே வந்து வணங்கி அவரவர்தம் இருக்கையில் அமர்கின்றனர். அவர்கள் தலைதாழ்த்தி வணங்கும்பொழுது தத்தம் முடிகளில் அணிந்திருந்த தம் காட்டுப்பூக்கள் பாண்டியனின் காலடி யில் விழுகின்றன. இந்தப் பூக்களைக்கொண்டே எந்தெந்த காட்டு மன்னர்கள் வந்துள்ளனர் என்பதை அறிந்து கொள்ளலாம். பூக்கள் வீழ்ந்த காட்சி கவிஞரின் சிந்தனையைப் பெரிதும் கவர்கின்றது. தென்னவன்பால் பெருமதிப்புக்கொண்டவராதலால் அவனைப் புகழ எண்ணுகின்ருர், அவரது மனம் சிந்தனையில் ஆழ்ந்திருந்தபொழுது பாரதத்தி லுள்ள ஒரு வரலாறு அவரது கிவுைக்கு வருகின்றது. ஐவர்க்கும் நூற்றுவர்க்கும் நடைபெற்ற கடும்போரில் அருச்சுனனுக்குப் பேரதிர்ச் சியைத்தரும் கிகழ்ச்சி ஒன்று ஏற்பட்டு விடுகின்றது. அருச்சுனனின் அருமை மகன் அபிமன்னன் போர்த்திறம் மிக்க வீரன். பகைவர் சேனையைப் பதின்மூன்று நாட்களாகப் படுகொலை செய்து வருகின் ருன். மாற்ருர் அவனை எப்படியாவது கொன்று விடவேண்டுமென்று சதி செய்கின்றனர். பதின்மூன்ரும் நாள் அருச்சுனன் வேருேர் இடத்தில் போர் புரிந்துகொண்டிருக்கும்பொழுது கன்னன், துரோ ணன், சயத்திரதன் முதலிய மாபெரும் வீரர்கள் பல கோடிக்கணக் கான வீரர்களுடன் அபிமன்னனை வளைத்துக்கொண்டு முறைமை யின்றிப் போர் செய்து அவனை மாய்த்து விடுகின்றனர். சயத்திர தனின் வாளுக்கு இரையாகிவிடுகின்ருன் வீர அபிமன்னன். வேறிடத்தில் போர் செய்துகொண்டிருந்த பார்த்தன் மீண்டு வந்ததும் தன் மகன் மரித்ததை அறிகின்றன். அடியற்ற நெடுமரம் போல் தேரிலிருந்து சாய்கின்ருன். அவனல் புத்திர சோகத்தைத் தாங்கமுடியவில்லை, கல்லும் புல்லும் கின்றுருகக் கண்ணிர்விட்டு அரற்றுகின்றன். நாளை அந்திபடு வேளைக்குள் சயத்திரதனின்