பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[20] யாங்கு ஒளித்தாய்? முறைதவருது ஆட்சிபுரியும் அரசனை மக்கள் இறைவன் ’ என்றே கருதி மதிப்பு தரும் வழக்கம் பண்டைய நாளில் இருந்தது. இத்தகைய அரசனத் திருமாலுடன் ஒப்பிட்டுப்புகழும் முறையும் ஏற்பட்டது. இதனை இலக்கண ஆசிரியர்கள் பூவை கிலே' என்று குறிப்பிடுவர். தொல்காப்பியரும், மாயோன் மேய மன்பெருஞ் சிறப்பின் தாவா விழுப்புகழ் பூவை நிலை... . என்று கூறுவர். கம்மாழ்வாரும் திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே என்று நவில்வர். ஒரு சமயம் தென்னன் அத்தாணி மண்டபத்தில் கொலு வீற்றி ருப்பதைக் கவிஞர் காண்கின்ருர். அவரது கண்களுக்குத் தென்னன் திருமால் போலவே காட்சி யளிக்கின்ருன். அக் காட்சி அவருடை. உள்ளத்தைத் துண்டுகின்றது; பாடலும் உருப்பெறத் தொடங்கு கின்றது. எக்களிப்பில், தென்னவனே தேர்வேந்தே ! தேறுநீர்க் கூடலார் மன்னவனே ! என்று மாறனை விளிக்கின்ருர் கவிஞர். தான் கண்டுபிடித்துவிடக் கூடும் என்று திருமால் பாண்டியன் வடிவில் வந்திருப்பதாகக் கருது கின்றர். மாறனின் ஆட்சி முறையே அவனே மால் என்று பறை சாற்றுகின்றதே என்றும் எண்ணுகின்ருர். திருமாலுக்குத்தான் ஓர் அடையாளம் இருக்கின்றதே! " என்று தான் அவரைக் கண்டுபிடித்து விட்டதாக நினைக்கின்றர்.

  • தொல் - பொருள் - புறத் - நூற். 5 (இளம்.) திருவாய் - 4 : 4 - 8.