பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாங்கு ஒளித்தாய்? 5 அவனது மார்பில் மறு ஒன்று உண்டு. கண்ணன் சிறுவனுக இருந்த பொழுது கம்சன் அனுப்பிய வஞ்சகஅரக்கன் குதிரைவடிவில் அவனைக் கொல்ல வந்தபொழுது கண்ணன் அவ்வரக்கனின் வாயைக் கிழித்து அவனைக் கொன்றபொழுது அம்மறு இருந்தது. அதன் பிறகு தன் மகள் உழையின்பொருட்டு வாணனல் சிறைவீடு செய் யப்பெற்ற காமனின் மகன் அகிருத்தனை மீட்கச் சென்ற கண்ணன் மண்ணுலும் உலோகத்தாலும் செய்யப்பெற்ற குடங்களைக்கொண்டு கூத்தாடியபொழுது அம்மறு காணப்பட்டது. மற்றும், ஏழு கொல் லேறுகளைத் தழுவி அடக்கி கப்பின்னைப் பிராட்டியைக் கண்ணன் மணந்த காலத்திலும் அம்மறு தென்பட்டது. இப்பொழுதும் அம்மறு பாண்டியன் வடிவாக வந்துள்ள திருமாலிடம் இருக்கவேண்டும் என் று ஊகம் செய்கின்ருர் கவிஞர். அவனையே கேட்டு விடலாம் என்று அவரது மனம் எண்ணுகின்றது. இந்த நிலையில் பாட்டும் வடிவம் பெற்றுவிடுகின்றது. இனி, பாடலைக் காண்போம். கூந்தன்மா கொன்று குடமாடிக் கோவலனுய்ப் பூந்தொடியைப் புல்கிய ஞான்றுண்டால்-யாங்கொளித்தாய் தென்னவனே தேர்வேந்தே தேறுநீர்க் கூடலார் - மன்னவனே மார்பின் மறு. * இது மாறனை மாலாகவே புகழ்வது. (பா. வே.) 5. பூக்தொடையைப்.

  • குருந்த மொசித்தஞான் றுண்டா லதனக்

கரந்த படியெமக்குக் காட்டாய்-மரம்பெரு போரிற் குருகுறங்கும் பூம்புன னிர்நாட மார்பிற் கிடந்த மறு. . என்ற பாடலும் இக் கருத்து பற்றியே வந்தது. (தொல்காப்பியப் புறத்தினையியல் நூற்பா 5. கச்சிஞர்க்கினியருரை மேற்கோள்.).