பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$2 முத்தொள்ளாயிர விளக்கம் விளக்கம் கூந்தல்மா பிடரி மயிர் கிறைந்த குதிரை. இது கம்சன் ஏவிய அரக்கன் குதிரை வடிவுகொண்டு கண்ணனைக் கொல்லவந்தபொழுது கண்ணன் அவ்வரக்கனைக் கொன்ற வரலாற்றினைக் குறிக்கின்றது. குடமாடிஅகிருத்தன மீட்கச் சென்றபொழுது கண்ணன் ஆடிய குடக்கூத்தினைச் சுட்டுகின்றது. கோவலன் ஆவினங்களைக் காப்பவன் பூங்தொடி . பூப் போன்ற வளையலே அணிந்தவள் ; இது அன்மொழித்தொகைப் பொருளில் கப்பின்னேயை உணர்த்துகின்றது. யாங்கு ஒளித்தாய் - எங்கு மறைத்து வைத்துக்கொண்டாய். தென்னவன் பாண்டியன். தேறுநீர் . தெளிந்த ர்ே. கூடல் - மதுரை. பெருமிதச் சுவை கிறைந்த பாடல். பெரிதாக ஒன்றைக் கண்டு பிடித்து விட்டதாகக்கொண்டு, யாங்கொளித்தாய் !’ என்று பேசும் பாவம் நம் உள்ளத்தைக் கொள்ளைகொள்ளுகின்றது. (19) 1. இது 51-ஆம் பக்கத்தின் தொடர்ச்சி (20-ஆம் பாடலின் அடிக்குறிப்பு):

  • வாணன் பேரூர் மறுகிடை நடந்து

நீணிலம் அளந்தோன் ஆடிய இடமும்’ என்ற சிலப்பதிகாச அடிகளாலும் (கடலாடு காதை-வரி. 545–46,} 'கோலால் நிரைமேய்த்து ஆயனுய்க் குடந்தைக் கிடந்த குடடிாடி’ என்ற ஆண்டாளின் திருவாக்காலும் (நாச்சியார் திருமொழி-13 2.),

  • பாரோர்களெல்லாம் மகிழப் பறைகறங்கச் சீரார் குடமிரண் டேந்திச்-செழுந்தெருவே ஆரார் எனச்சொல்லி ஆடும் அதுகண்டு’ என்ற காலாயிரம் . சிறிய திருமடல் (வரி. 23-25) பகுதியாலும்,

கொட்டாய் பல்லிக்குட்டி, குடம் ஆடி உலகளந்த மட்டார் பூங்குழல் மாதவ னவரக் - 恋* × கொட்டாய் பல்லிக் குட்டி என்ற காலாயிரம் .பெரிய திருமொழி (10 : 4) யாலும் அறியலாகும்.