பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[21] பல்வளம் செறிந்த பாண்டிநாகு இவிஞர் பாண்டி நாடு முழுமையும் சுற்றிப் பார்த்துப் பல்வளங். களையும் பாங்குற அறிந்தவர். அரசன் அருகிலேயே இருந்து பல செய்திகளைத் தெரிந்தவர். அத்தாணி மண்டபத்தில் அரசன் வீற்றி ருக்கும்பொழுது நடைபெறும் பல நிகழ்ச்சிகளை அவர் கேரிலும் கண்டறிந்திருக்கின்ருர், - மாறனின் மண் இயற்கைவளஞ் செறிந்தது ; கனி (Mine) வளம் மிக்கது. எப்பக்கம் அகழ்ந்தாலும் செம்பொன் காணப்பெறும் , தோண்டத் தோண்டத் தங்கம் கிடைக்கும். பல பகுதிகளிலிருந்தும் தங்கக் கட்டிகள்-பாளங்கள்-வந்த வண்ண மிருக்கின்றன. பூமி யில் கிடைப்பதெல்லாம் பொன்தானே என்று வியக்கின்ருர் கவிஞர். தலை நகரமாகிய மதுரையில் முத்தமிழ்ப் பண்ணை செழித்திருக் கின்றது. இயல்,இசை,நாடகங்களைப் பல புலவர்கள் கண்ணுங் கருத்து மாகக் கவனத்துடன் வளர்த்து வருகின்றனர். சங்க இலக்கியக் கருவூலம் என்பது சாமானியமா? அதனை ஆராய ஆராய அது வற்ருத கருத்துச் செல்வத்தை யல்லவா கொடுத்துக்கொண்டிருக்கின்றது? பாண்டி காட்டைச் சுற்றியுள்ள கடலின் வளமும் சொல்லுங் தரமன்று. கைவளையல்களுக்கேற்ற சங்கின் குவியல்கள் ஏராளமாகக் கிடைக்கின்றன. கொஞ்சம் ஆழ்ந்து மூழ்கிளுலோ ஆரத்திற் கேற்ற அழகு முத்துக்கள் அளவுக்கு மீறிக் கிடைக்கின்றன. நாட்டிலுள்ள மலைப்பகுதிகளில் களிற்றியான கிரைகள் பல்கிப் பெருகிவருகின்றன. யானைப்படைகளுக்குரிய யானைகளைப் பணங் கொடுத்து வாங்கவேண்டிய அவசியமே பாண்டிய நாட்டில் இல்லை. இவ்வளவு செல்வ வளத்தினைக் கண்டு பொருமைப்பட்டோ அல்லது பேராசைப் பட்டோ பகைவர்கள் படையெடுத்து வந்தால் அவர்களுடைய மார்பங்களைக் கிழித்தெறிவதற்குப் பாண்டியனின் கை யில் ஒளி பொருந்திய வேல் இருக்கின்றது. இந்த நிலையில் மாற்ருர்