பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[23] ஒன்னரும் உவந்தாராதல் பகைவரின் நாட்டில் தொடர்ந்து போர் நடைபெறுகின்றது. மாறனின் படைகள் மாற்ருரின் மதிலை வளைத்துக்கொண்டு போர் புரிகின்றன. பகைவர்கள் கோட்டைவாயிலை இறுக மூடிக்கொண்டு உள்ளே அடைந்து கிடக்கின்றனர். போர் நிலைக்கு ஏற்பப் பகைவர் கள் தேர், யானை, குதிரைப் படைகளை அணி செய்து நிறுத்தியிருக் கின்றனர். இங்கிலையில் ஒளி நூல் வல்லான்-சோதிடன்-பாண்டி யனின் முன் வந்து வணங்கி, மன்னர் பெருமானே, இன்று உத்தி ராடத் திருநாள் என்று கூறுகின்ருன். உத்திராடம் பாண்டியனது பிறந்த நாள். உடனே போர் நிறுத்தக் கட்டளை பிறந்து விடுகின்றது. பாண்டியனின் படைத்தலைவன் பகைவர்களை நோக்கிக் கூறு கின்ருன் : பகையோரே, இன்று எம் மன்னர் பிறந்த நாள்; திரு உத்திராடத் திருநாள். ஆகவே, போர் இன்று நடைபெருது. அஞ்சாது கதவுகளைத் திறமின். யானை, தேர், குதிரை இவற்றின்மீது அமைத் துள்ள இருக்கைப் பண்களையும் களைந்து விடுங்கள் என்று அறிக்கை விடுகின்றன். திருவிழா மகிழ்ச்சியினல் ஒன்னரையும் உவந்தாராக்கும் உயர்ந்த பண்பினைப் பாண்டியனிடம் காண்கின்ருர் கவிஞர். பாண்டியனின் போர்ப் பண்பு-யுத்த தருமம்-கவிஞ. ருக்குப் பேருவகை தருகின்றது. அந்த உவகையில் அழகிய பாடல் ஒன்று உருப்பெறுகின்றது. இனி, பாடலைக் காண்போம்: கண்ணுர் கத்வந் திறமின் களிருெடுதேர் பண்ணுர் நடைப்புரவி பண்விடுமின்-நண்ணுதிர் தேர்வேந்தன் தென்னன் திருவுத்தி ராடநாட் போர்வேந்தன் பூச லிலன். (யா - வே.) 4 களிருெடுதார் ; 8 கண்ணுர்தந் , கண்ணுத.

  • இது தொல் பொருள் புறத்திணையியல் 36-ஆம் நூற்பாவின்,