பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்னரும் உவந்தாராதல் 5? இது மாறனின் போர் மாண்பினைப் புகழ்வது. விளக்கம் : கண்ணுர் கதவம் - கோட்டைக்கு வெளியேயுள்ள அகன்ற கதவுகள். களிறு ஆண் யானை, பண்ணுர் கடைப்புரவி . இசைக்கு ஒத்த கடையினையுடைய குதிரை. பண் விடுமின் - அணிசெய்து உலா வரச் செய்யுங்கள். கண்ணுதீர் - பகைவர் காள் (விளி); பாண்டியனுடன் இணங் காது எதிர் கிற்கின்றவர்கள் என்றவாறு, தேர் வேந்தன் தென்னன் . பல தேர்களைக்கொண்ட பாண்டியன், திருவுத்திராடம் - ஒரு விண்மீன் ; இதனை யுடைய நாளில் பாண்டியன் பிறந்தான். போர் வேந்தன் - போரினை மேற் கொண்ட அரசன். பூசல் இலன் போர் செய்யமாட்டான். பாண்டியனின் பகைமறக்கும் பண்பினைக் கூறும் இக் கவிதையில் காம் திளேக்கும்போது கோசல நாட்டுடை வள்ளலின் பெருங்குணமும் அறத்தின் உருவம் போன்ற தருமபுத்திரனின் உயர்குணமும் நமது நினைவுக்கு வருகின்றன. (23) 56-ஆம் பக்கத்தின் தொடர்ச்சி. (23-ஆம் பாடலின் அடிக்குறிப்பு): சிறந்த நாளணி செற்ற நீக்கிப் பிறந்த நாள்வயிற் பெருமங் கலமும்’ என்பதனுள் செருவொழிந்ததற்கு நச்சிஞர்க்கினியர் காட்டிய மேற்கோள்.