பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[27] பெண்ணுக்கு இது தகுமா? பண்டைக்காலத்தில் அரசர்கள் போருக்கு ஆண்யானையையும் இவர்ந்து செல்வதற்குப் பெண்யானையையும் வைத்துக்கொள்வது வழக்கம். ஒரு சமயம் பாண்டியன் பெண்யானைமீது உலாவந்து கொண்டிருக்கின்றன். அதனை கங்கை யொருத்தி காண்கின்ருள் ; அரசன்மீது காதல்கொள்ளுகின்ருள். அவனைக் கண்குளிரக் கண்டு அனுபவிக்கவேண்டும் என்று நினைக்கும் அவளுக்கு வாய்ப்பு கிட்ட வில்லை. யானை வேகமாக நடந்து சென்று விடுகின்றது. யானையின் மீது அவளுக்குக் கோபம். அதனைப் பார்த்து இவ்வாறு பேசுகின்ருள்:

  • இளமை வாய்ந்த பெண் யானையே, கீ என் தோழியல்லவா? யான் கின்பால் நடைகற்றுக்கொண்டபொழுது மெதுவாய் நடந் தாயே! இப்பொழுது மதுரை மன்னன் பாண்டியன் நின்மீது இவர்ந்து உலாப்போகின்றன். நானும் பார்த்துக்கொண்டுதான் இருக்கின் றேன். இது உலாவாயிற்றே ! பைய ஊர்ந்தல்லவா செல்லவேண்டும்' என்று உனக்கு ஏன் தெரியாமற்போயிற்று? இங்ங்னம் முறைதவறி கின் இயல்பிற்கு மாறுபட்டு நடப்பதைக் கவனித்தால் உன் பெண் தன்மை குறித்து ஐயப்படவேண்டிய கிலேமை ஏற்பட்டிருக்கின்றது. இது உனக்குத் தகுமோ ?” என்கின்ருள்.

பெண்ணின் மனநிலையைக் கவிஞர் இந்தச் சொல்லோவியத் தால் வெளிப்படுத்துகின்ருர் : எலாஅ மடப்பிடியே யெங்கூடற் கோமான் புலாஅ னெடுநல்வேல் மாறன்-உலாஅங்காற் பைய நடக்கவுந் தேற்ருயால் நின்பெண்மை ஐயப் படுவ துடைத்து. இது கைக்கிளை ; இதுவும் பிடியுடன் பேசுவதே.

  • இப்பாடலை 70-ஆம் பாடலுடன் ஒப்பிடுக.

5