பக்கம்:முந்நீர் விழா.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அமைச்சர் முத்திருளப்பர்

93


முத்திருளப்பர் நல்ல நாளில் திருப்பணியைத் தொடங்கினார். பெரிய பெரிய தூண்களை நிறுத்தி, பாவு கற்களைப் பரப்பிப் பிராகாரத்தைச் சமைக்கச் செய்தார். சிறந்த சிற்பிகள் வந்து வேலை செய்தார்கள். கட்டிடக் கலைஞருக்கும் மற்றத் தொழிலாளர்களுக்கும் அறுசுவை உண்டி நாள் தோறும் கிடைக்கச் செய்தார். அவர்கள் தங்கள் குடும்பத்தோடே வந்து இராமேசுவரத்தில் தங்கி வாழலானர்கள். ஒரு நாளா, இரண்டு நாளா? பல ஆண்டுகளாகச் செய்ய வேண்டிய திருப்பணி அது. செங்கற்களும் கருங்கற்களும் சுண்ணாம்பும் மலை மலையாகக் குவிந்தன.

பெரிய பிராகாரம் ஆதலின் நன்றாகத் திட்டம்செய்து கட்ட வேண்டியிருந்தது. மெல்ல மெல்லக் கட்டிடம் உயர்ந்து வந்தது. பல ஆண்டுகளுக்குப் பின் பிராகாரம் கட்டி முடிந்தது. கட்டிய பிறகு அதைப் பார்த்தவர்கள் யாவரும் அது மனிதர்களால் செய்து முடியாத காரியம் என்று வியந்தார்கள். "தெய்வத்தின் திருவருள் இல்லாவிட்டால் இந்தக் காரியத்தைச் செய்து முடிக்க இயலாது. அமைச்சருடைய பக்தியும் ஆற்றலுமே இந்தச் செயற்கரிய செயலை நிறைவேற்றக் காரணமாயின' என்று யாவரும் பாராட்டினர்கள். வெளியூர்களி லிருந்து பல செல்வர்களும் அன்பர்களும் இராமேசுவர தரிசனத்துக்கு வந்து வந்து இந்தப் பிராகாரத்தைக் கண்டு பிரமித்துப் போணார்கள்.

புலவர் ஒருவர் இந்தப் பிராகாரச் சிறப்பைப் பாட்டிலே பதித்துப் பாடினார்.

"நீ எழுப்பிய தூண் ஒவ்வொன்றும் ஒரு மலை. பாவு கற்களை வளையாமல் தாங்கும் போதிகைகளோ மேரு மலை. இத்தகைய பிரம்மாண்டமான திருப்பணியின் பெருமையை என்னவென்று எடுத்துச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முந்நீர்_விழா.pdf/102&oldid=1214831" இலிருந்து மீள்விக்கப்பட்டது