பக்கம்:முந்நீர் விழா.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

முந்நீர் விழா

 சொல்வது- உன்னுடைய ஈகையினால் இந்தக் காரியத்தை நீ சாதித்துக் கொண்டாய். உன் கை கற்பகம் போன்றது; பொன்னும் பொருளும் சோறும் துணியும் வழங்குவது. உன்னை இறைவன் இந்தத் திருப்பணிக் காகவே படைத்திருக்கிறான் என்று தோன்றுகிறது. பிரம தேவன், நீ உன் தாய் வயிற்றில் கருவாக இருக்கும்போதே திருப்பணிக்கு ஏற்ற ஆற்றலை அளித்து உருப்பண்ணியிருக்கிறான்' என்று அதில் பாராட்டினார்.

பருப்பதங்கள் ஒவ்வொருதுாண்; பாவுக்கல்
வளையாத பார மேரு. - -
சுரிப்படங்காப் போதிகை! நீ செய்தபணிப்
பெருமைஎன்ன சொல்வேன் ஐயா!
தருப்பொலியும் கரதலமுத் திருளப்ப
சாமி!நின்றன் தாய்பால் உன்னைக்
கருப்பணிநின் திருப்பணிக்கென் றுருப்பணினான்
மருப்பொலியும் கமலத் தோனே.

(பருப்பதம் - மல. சுரிப்பு முடங்குதல், தரு - கற் பகத்தின் தன்மை. கருப்பண்ணித் திருப்பணிக்கு என்று உருப் பண்ணினன். மரு கறு மீணம். கமலத்தோன்பிரமன்.)

வேறு புலவர்களும் இந்த அற்புதமான திருப் பணியைப் பாராட்டிப் பாடினார்கள். 1740-ஆம் ஆண்டில் தொடங்கிய இந்தத் திருப்பணி இருபது ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்றதென்று தெரிய வருகிறது. -

அந்தப் பிராகாரத் தூண்களில் அமைச்சர் முத்திருளப்ய பிள்ளையின் திருவுருவமும் அவருக்கு உதவியாகருந்த சின்னப் பிரதானி கிருஷ்ணையங்காரின் திருவுருவமும் அமைக்கப் பெற்றிருக்கின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முந்நீர்_விழா.pdf/103&oldid=1214830" இலிருந்து மீள்விக்கப்பட்டது