பக்கம்:முந்நீர் விழா.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



நெட்டிமாலைப் புலவர்
1

இராமநாதபுரம் அரண்மனையில் நாளுக்கு நாள் கூட்டம் அதிகமாகிக் கொண்டு வந்தது. தமிழ்ப் புலவர்களும் மற்றவர்களும் நாள் தவறாமல் போய் வந்தார்கள். ஊர் முழுவதும் கம்பராமாயணத்தைப் பற்றியே பேச்சு. 'கம்பனுடைய வாக்கு அமுத வாக்கு. அப்படிப் பாட இனிமேல் யார் பிறக்கப் போகிறார்கள்?' என்றார் ஒருவர்.

தெரியாமலா, கம்ப நாடன் கவிதையிற் போற் கற்றோர்க்குள்ளம் களியாவே' என்று பாடினார்கள்? அப்படிப் பாடினவர் வாயில் தேனையும் சர்க்கரையையும் கலந்து போடவேண்டும்” என்றார் ஒருவர்.

சரியாகச் சொன்னீர்கள். கம்பன் பாட்டும் சர்க்கரைப் புலவர் விளக்கமும் பாலுந் தேனும் கலந்தது. போல இருக்கின்றன. கம்பன் பாட்டு உயர்ந்ததா, சர்க்கரைப் புலவர் விளக்கம் சிறந்ததா என்று நம்மால் எடைபோட முடியவில்லை' என்ருர் மற்றோர் அன்பர்.

தெரியாமலா இவரை நம்முடைய மன்னர்பிரான் அரசவைப்புலவர்களில் ஒருவராக ஆக்கிக்கொண்டார்?"

"இத்தகைய புலவர்களைத்தேர்ந்தெடுத்து அவையில் '. வைத்துக் கொண்டிருக்கிற மன்னர் பெருமானுடைய தமிழ் ஆர்வத்தைப் பாராட்டத்தான் வேண்டும்.'

"ஆம், சர்க்கரை இருக்கிறது: அமுதம், இருக்கிறது."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முந்நீர்_விழா.pdf/105&oldid=1214829" இலிருந்து மீள்விக்கப்பட்டது