பக்கம்:முந்நீர் விழா.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நெட்டிமாலை புலவர்

108

சித்தாந்த அறிவு மட்டும் இருந்தால் போதாது; தமிழ்ச் செய்யுளுக்கு நுட்பமாக உரை விரிக்கும் ஆற்றலும் இலக்கணப் புலமையும் வேண்டும்.

இத்தகைய தகுதியை நன்றாகப் பெற்ற புலவர், அமைச்சர் தம் கருத்தைக் கூறியவுடன் மயங்கவில்லை. "அப்படியே செய்வேன்"என்று ஒப்புக்கொண்டு அவ் வுரையை எழுதி முடித்தார். அவர் எழுதி முடித்தவுடன் அதனைக் கண்டு அமைச்சர் வியந்தார். அறிஞர் பாராட்டினர். புலவர் போற்றிப் பாடினர்.

உரைதருவே தாந்தகுளா மணியுட் பொருளே
உலகிலுள்ளோர் உணரவுரை செய்கஎனக் கடல்சூழ் :தரை அரசன் சேதுபதி அமாத்தியனும் தாமோ ::தான்கங்கா குலதிலகன் தகுதிபெறச் சாற்ற :வரையறுத்துச் சித்தாந்தப் பொருள்திறனுக் தோன்ற
வகுத்தனன்நற் றுறைசைகமச் சிவாயதே சிகன்தாள் :பரவுசிவக் கொழுந்துகிதி அருள்கல்விக் கடலேப்
பருகுமுகில் சர்க்கரைகற் பாவலர் கோனே.”

என்பது ஒரு புலவர் பாடிய சிறப்புப் பாயிரம்.

இந்தச் சர்க்கரைப் புலவர் பரம்பரையில் பல புல வர்கள் இருந்து, பல நூல்களே இயற்றிப் பெயர் பெற் றிருக்கிறார்கள். அவரில் சிலருக்குச் சர்க்கரைப் புலவர் என்றே பெயர் உண்டு.அமாத்தியன்- மந்திரி. கங்காகுலம் - வேளாளர் மரபு. துறைசை - திருவாவடுதுறை நமச்சிவாய தேசிகன் - திருவாவடுதுறை துறை ஆதீனத்து முதல் ஞானசிரியர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முந்நீர்_விழா.pdf/112&oldid=1214814" இலிருந்து மீள்விக்கப்பட்டது