பக்கம்:முந்நீர் விழா.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4

முந்நீர் விழா



தன்னுடைய இராசதானி நகருக்கு வந்த பிறகு அரசன் தன் அமைச்சர்களைக் கூட்டி வைத்து மந்திராலோசனை செய்தான். அக் காலத்தில் தமிழ்நாடு இப்போதுள்ள குமரி முனைக்கும் தெற்கே பல காவதங்கள் விரிந்திருந்தது. அங்கே பஃறுளியாறு என்ற ஆறும், குமரி மலையும், குமரியாறும், சில நாடுகளும் இருந்தன. பாண்டிநாட்டுக்குத் தெற்கே உள்ள சில சிறிய நாடுகளைக் குறுநில மன்னர்கள் ஆண்டு வந்தனர். பாண்டியன் மாகீர்த்தி அரசு கட்டிலேறிச் சில ஆண்டுகளே ஆயின. அதற்குள் அவன் சில போர்களில் வெற்றி பெற்றான். தெற்கே இருந்த மன்னர்கள் சிலர் அவனுக்குத் திறை செலுத்தி வந்தார்கள். சில காலமாக அவர்களில் சிலர் பாண்டியனால் என்ன செய்ய முடியும் என்ற நினைப்பினல் திறை செலுத்துவதை நிறுத்திவிட்டார்கள். வேறு சில மன்னர் தனியாட்சி நடத்தினர்:

கீழ் கடலையும் மேல் கடலையும் பார்த்துவிட்டு வந்த பாண்டிய மன்னனுக்குத் தென் கடலையும் காண வேண்டும் என்ற ஆசை உண்டாயிற்று. வடக்கே கடல் இல்லை. தெற்கே உள்ள கடலுக்கும் சென்று அதுவரையில் தன் புகழை நாட்டவேண்டும் என்ற நினைவு, மேல்கடற்கரையில் அலைகள் தன் அடியை வருடும்படியாக நின்றபோது அவனுக்கு உண்டாயிற்று. ஆனால் உடனே அந்தக் காரியத்தைச் செய்ய முடியாது. அவனிடம் பகை பாராட்டும் மன்னர் சிலர் இடை வழியில் இருந்தனர். அவர்களை ஒடுக்கினால்தான் தென் கடலுக்குச் செல்ல முடியும்.

அமைச்சருடன் சூழ்ந்தான். பழங்காலத்தில் எல்லா மன்னர்களும் பாண்டிய மன்னருக்கு அடங்கியே இருந் தனர். இடையில் சில காலமாகப் பாண்டிய மன்னர்களின் வலிமை குறையவே, சிறிய மன்னர்கள் தலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முந்நீர்_விழா.pdf/13&oldid=1214561" இலிருந்து மீள்விக்கப்பட்டது