பக்கம்:முந்நீர் விழா.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

5

முந்நீர் விழா



யெடுத்தனர். அவர்கள் மிடுக்கை அடக்க வழி என்ன என்று மாகீர்த்தி இப்போது ஆராய்ந்தான். தூதுவரை அனுப்பித் தென் கடற்குச் செல்லும் பாண்டியனை வர வேற்கும்படி சொல்லச் செய்வதென்றும், முரண் உடை யவர் யாரேனும் இருந்தால் வீரத்தால் வென்று அடிப் படுத்தி மேலே செல்ல வேண்டுமென்றும் முடிவு செய்தார்கள். அதன்படியே தெற்கில் உள்ள நாடுகளுக்குத் தூதுவரை விடுத்தார்கள்.

சில மன்னர்கள் மாத்திரம் பாண்டிய அரசன் வருகையை ஏற்றுக்கொண்டார்கள். வேறு சிலர், "எங்கள் நாட்டில் வேற்று மன்னன் அடி வைக்க ஒட்டோம்” என்று வீறு பேசினர்.

பாண்டியன் மாகீர்த்தி நெடிய உருவம் படைத்தவன். அதனால் அவனைப் புலவர்கள், "நெடியோன்' என்று பாராட்டிப் புகழ் பாடுவார்கள். "தென்னாட்டு மன்னர்களை வென்று புறங் காண்பேன்" என்று நெடியோன் வஞ்சினம் பூண்டான். படைகளைத் திரட்டினான். முன்பே சில போர்களில் வெற்றியைச் சுவைத் திருக்கும் வீரர்கள் இப்போது பின்னும் ஊக்கமுடன் எழுந்தனர். புதிய வீரர்களும் வெற்றி நிச்சயம் என்ற துணிவோடு படையில் சேர்ந்தனர்.

'இந்தப் பெரும் படையைக் கொண்டு வட இமயம் வரையிற் சென்று, அடிப்படுத்தலாமே!” என்று படைத் தலைவர்கள் பெருமிதம் கொண்டனர்.

அரசன் படைகளுடன் புறப்பட்டான். கையில் வேலை ஏந்தி, தென் கடலளவும் சென்று அக்கடல் நீரினுல் என் அடிகளைக் கழுவிய பின்பே திரும்புவேன்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முந்நீர்_விழா.pdf/14&oldid=1214565" இலிருந்து மீள்விக்கப்பட்டது