பக்கம்:முந்நீர் விழா.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

முந்நீர் விழா



அவ்வாறு செய்யேனqயின், நான் பாண்டிய மரபிற் பிறந்தவன் அல்லேன் ஆவேன்! தமிழ் மொழியைப் பேணும் இன்பத்தை நான் இழக்கக் கடவேன்! குடி மக்கள் தூற்றும் பழியோடு கொடுங்கோலை உடையவனாவேன்! அன்று புலவர்கள் கீழ் கடலும் மேல் கடலும் பாண்டி நாட்டின் எல்லையென்று போற்றினார்கள். ‘மூன்று திசையிலும் கடல் எல்லை காட்டப் புகழ் மண்டிக் கிடப்பது பாண்டி நாடு என்று புலவர்கள் பாடும்படி செய்யாவிட்டால், என் ஆண்மை மாசுற்றுப் போவதாக!" என்று வஞ்சினம் கூறினான். பகைவர்களுக்கு நேரப் போகும் துன்பங்களை நினைந்து மகளிர் நடுங்கினர் அரசன் போர்க்கோலத்தோடு புறப்பட்டு விட்டான்.


படை வேகமாகச் சென்றது. பாண்டி நாட்டை அடுத்திருந்த மன்னன் பாண்டியனை எதிர்க்கவில்லை. அவன் உரிய கையுறைகளுடன் எதிர்கொண்டு வரவேற்ருன். தன் சிறு படையின் ஒரு பகுதியையும் பாண்டியன் படையுடன் சேர்ந்து செல்லும்படி விடுத் தான். போரின்றியே பெற்ற முதல் வெற்றியாக இது முடிந்தது. அதனல் போர் வீரர்களுக்கு ஊக்கம் பின்னும் மிகுதியாயிற்று.


படை மேலும் தென் திசை நோக்கிப் படர்ந்தது. ஏழு சிறிய நாடுகளை உடைய தெங்க நாடு என்ற பகுதியை ஓர் அரசன் ஆண்டுவந்தான். அவன் ஓரளவு மிடுக்கும் வீரமும் உடையவன். பாண்டியனது படை வன்மையை அவன் அறியாதவன். அவன் நாட்டின் தலை வாயிலில் பெரும் போர் மூண்டது. பாண்டியன் படையுடன் வர இருப்பதை முன்பே ஒற்றர்களின் வாயிலாக உணர்ந்திருந்தான் அவன். ஆதலால் பாண்டி யனை வாளொடும் வேலொடும் எதிர் நின்று பொர.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முந்நீர்_விழா.pdf/15&oldid=1214566" இலிருந்து மீள்விக்கப்பட்டது