பக்கம்:முந்நீர் விழா.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முந்நீர் விழா

11



பல பிணத்தையும், தசையையும், குருதியையும் மிதித்து நடந்து வந்து தென் கடல் நீரில் கால் வைத்தான். கடல் அவன் அடிகளை இப்போது தூய்மை ஆக்கி விட்டது.

கையில் உள்ள வேலை நோக்கினான். அது பகைவர் மார்பிலே புகுந்து வந்திருந்தது. பல களிறுகளின் தலை வழும்பின் நாற்றம் அதில் வீசியது. ரத்தக் கறை படிந்திருந்தது. அது தூய்மையுற வேண்டாமா? இப்படியே காலையும் வேலையும் கறைப்படுத்திக் கொண்டிருந்தால் அமைதி பெறுவது எப்போது? கலைநயம் தேர்வது எப்போது? தமிழை மாந்துவதற்குக் காலம் எங்கே?

என்னவோ நினைத்துக்கொண்டான். தன் கையில் இருந்த வேலை ஆத்திரத்தோடு முன்கிடந்த கடலை நோக்கி எறிந்தான். புலவர்கள் அது கண்டு வியந்தனர். "ஆம். அப்படித்தான் இந்த முரட்டுக் கடலை அடக்க வேண்டும். இனி வேலை வீச இடம் இல்லை; கடல் ஒன்றுதான் என்ற குறிப்பை மன்னர் பிரானுடைய செயல் காட்டுகிறது' என்று பாராட்டினர்கள்.

முன்பு கீழ்கடல் விளிம்பும் மேல் கடல் வடிம்பும் தன் அடிகளை அலம்ப நின்ற நெடியோனாகிய பாண்டியன், இன்று தென் கடல் வடிம்பும் தன் திருவடியை அலம்ப நின்ருன். இன்றுவரை அவன் இருநீர் வடிம்பலம்ப நின்றான். இன்று முந்நீர் வடிம்பு அலம்ப நின்றான். இந்த அரிய செயலை முந்நீர் விழவு என்று அன்று கொண்டாடீனார்கள்.

-

மன்னன் தென் கடலையும் தன்னுடையதாக்கிக் கொண்டு வந்துவிட்டான் என்ற செய்தி பாண்டி நாட்டு மக்களுடைய உள்ளத்தில் தேனைப் பெய்தது. அவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முந்நீர்_விழா.pdf/20&oldid=1214722" இலிருந்து மீள்விக்கப்பட்டது