பக்கம்:முந்நீர் விழா.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பசிப்பிணி மருத்துவின்

15


கிறோம்-. பலபல விதமாக வேடம் போட்டு நடிக்கிறோம். மன்னாதி மன்னன்கூட நாட்டை ஆள்வதனால் பசிப் பிணியை வென்றவனாவதில்லை. அவனும் தன் பசியைத் தீர்க்க வேண்டிய செயல்களைச் செய்கிறான், கலைஞன் தன் கலையைப் பிறர் நுகரச் செய்து, அதனால் வயிற்றைக் கழுவிக்கொள்கிறான்.

தானே ஈட்டினலும் ஈட்டாவிட்டாலும், ஒருவேளை கூடத் தவறாமல் வயிற்றுக்குச் சோற்றைப் போட வேண்டியிருக்கிறது. இன்று இவனுக்குச் சம்பாத்தியம் இல்லையே! சோறு கேளாமல், பசியைக் காட்டாமல் இருக்கலாம் என்று அது இருப்பதில்லை. நீ எப்படிப் போனலும் போ; எனக்குப் போடுவதைப் போட்டுவிடு' என்று அது கேட்கிறது.

பசியென்னும் இந்த வியாதி யாவருக்கும் வருவதால், இதைப் பெரிய வியாதியென்றே சொல்ல வேண்டும். சிறிய நோய்க்குச் சிறு மருந்தும், சிறிய மருத்துவதும் இருந்தால் போதும். பெரிய வியாதிக்குப் பெரிய மருந்தும், பெரிய வைத்தியனும் வேண்டும். பசிப் பிணிக்கு மருந்தாக உதவுவது சோறு. -

"இருமருந்து விளைக்கும் நன்னாட்டுப் பொருகன்'

என்று வரும் பாட்டில், மனிதன் தன் பசியை அவித்துக் கொள்ள உதவும் தண்ணிரையும், சோற்றையும் இரு மருந்து என்று ஒரு புலவர் சொல்கிறார், தண்ணீராகிய மருந்து இயற்கையில் கிடைக்கிறது. வெறும் தண்ணீரை நாலு கை அள்ளிக் குடித்தால் தாகம் தீருமேயன்றிப் பசி போகாது. அதற்குச் சோறு வேண்டும். சோறு, நெல்லை விளைத்து அரிசியாக்கிச் சமைப்பவர்களிடம் இருக்கிறது. அவர்கள், தாம் உண்டு தம் பசி தீர்கிறார்கள்; அதோடு, பிறரும் உண்டு பசியைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முந்நீர்_விழா.pdf/24&oldid=1214733" இலிருந்து மீள்விக்கப்பட்டது