பக்கம்:முந்நீர் விழா.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கடலும் கிணறும்

23


"தாங்கள் இந்த ஊருக்கு எழுந்தருளியது, கலைமகளே எழுந்தருளியது போல இருக்கிறது. தங்களைப் போன்ற பெரியவர்கள் இந்தச் சிறிய ஊருக்கு வருவதற்கு இந்த ஊர் என்ன புண்ணியம் செய்ததோ, தெரிய வில்லை. ஊரில் உள்ளவர்கள் புண்ணியம் செய்ததனால் தாங்கள் வந்தீர்கள் என்று சொல்லுவது தவறு. இந்தப் புண்ணியவான் இந்த ஊரில் இருக்கிறதனால்தான் தங்களைப் போன்றவர்கள் இந்த ஊரைத் தேடி வரு கிறார்கள்."

இதற்குள் அந்த உபகாரி, "தாத்தா, வேறு விஷயங்ளைப்பற்றிப் பேசுங்கள்” என்றார்,

கிழவர் மேலே தொடர்ந்தார்: "நான் தங்களுக்குச் சொல்லவேண்டும் என்பதில்லை. தாங்கள் தெய்வாம்சம் உடையவர்கள். தங்கள் திருவாக்கால் இந்தப் புண்ணிய வானை ஆசீர்வாதம் செய்ய வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன். எவ்வளவோ பேர்கள் தங்கள் வாக்கால் புகழ் பெற்றிருக்கிறார்கள். இந்த வள்ளலையும் தாங்கள் செந்தமிழ்ப் பாவால் வாழ்த்த வேண்டும்.'

வீட்டுக்கு உடையவர் ஒளவையாரைப் பார்த்து, "அந்தப் பெரியவர் என்னிடம் உள்ள அபிமாணத்தால் பேசுகிறார். இந்த ஊரில் பல பெரிய செல்வர்கள் இருக்கிறார்கள். அவர்களைப் பார்க்க நான் மிகவும் சிறியவன். இறைவன் அவர்களுக்கு அளவற்ற செல்வத்தைக் கொடுத்திருக்கிறான். இந்த ஊரில் அவர்கள் இருப்பதும் ஒரு பெருமைதான். பொதுவாக எல்லோரையும் வாழ்த்துவதுதான் முறை. இந்த எளியேனைத் தனியே வாழ்த்துவதற்கு நான் என்ன செய்துவிட்டேன்!' என்றார், -

ஒளவையார் இதுவரையில் பேசாமல் இருந்தவர் இப்போது வாயைத் திறந்தார். முன்னால் பேசிய கிழ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முந்நீர்_விழா.pdf/32&oldid=1214752" இலிருந்து மீள்விக்கப்பட்டது