பக்கம்:முந்நீர் விழா.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கடலும் கிணறும்

25



அந்த உபகாரி, 'ஆமாம், இந்த ஊர் வாழ்ந்தால் தான் நான் வாழ்வேன். ஊர் என்பது எல்லோரும் சேர்ந்ததுதானே? ஆகையால் எல்லோரையுமே வாழ்த்துங்கள்' என்றார்.

"உங்கள் விருப்பப்படியே செய்கிறேன்' என்று சொல்லிவிட்டு, உடன் இருந்த புலவர்களின் முகங்களைப் பார்த்தார் தமிழ்ப் பிராட்டியார். அவர்கள் மூதாட்டியார் எப்படிப் பாடப்போகிறார் என்று ஆவலோடு காத்திருந்தனர்.

'அவர்கள் பெரிய செல்வர்கள் என்று சொன்னிர்கள். உங்களுக்கு அத்தனை செல்வம் இல்லை அல்லவா?' என்று ஆற அமரப் பாட்டி கேட்டார்.

"ஆமாம்.' 'அவர்கள் செல்வம் கடலைப் போன்றதானால் உங்கள் செல்வத்தைச் சிறிய கிணறாகச் சொல்லலாமா?"

'தங்கள் திருவுள்ளம்.” .

'அவர்களுக்கு மேன்மேலும் செல்வம் பெருகட்டும் என்று பாடப் போகிறேன்.” -

இப்போது யாரும் பேசவில்லை. பாட்டி பாடலைச் சொல்லத் தொடங்கினார். அந்தப் பாட்டின் பாவத்தை முதலில் தெரிந்துகொண்டால் பிறகு பாட்டு நன்றாகச் சுவைக்கும்.

பிறரைக் கடலென்றும் அவரைக் கிணற்று நீரென்றும் பாடினார் ஒளவையார். வெறும் அளவுக்கா அவ்வாறு அவர் சொன்னார்? கடல் அளவில் பெரியதுதான். ஆனால், அதிலிருந்து ஒரு சொட்டுத் தண்ணிராவது தாகத்துக்கு உண்ணமுடியுமா? அதற்கு அருகிலேயே தோண்டிய கிணற்றில் சிறிய ஊற்றிலிருந்து வரும் நீரோ தாகத்தைப் போக்கும். சிறிய ஊற்றாக இருந்தால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முந்நீர்_விழா.pdf/34&oldid=1214755" இலிருந்து மீள்விக்கப்பட்டது