பக்கம்:முந்நீர் விழா.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கடலும் கிணறும்

27



...ஈயாச்
சிறுவிலைக் காலத் தானும்
உறுபொருள் தந்துஎம் சொற்கொள் வோயே!

(சிறுவிலேக் காலம் - பஞ்சகாலம். சொல் - புகழும் வார்த்தைகள். கொள்வோயே - கொள்பவனே; கொள்வாய் என்றும் பொருள் செய்யலாம்.)

அவர்களுக்கு எவ்வளவு பணம் சேர்ந்தாலும் கடைசியில் யாரேனும் அடித்துக்கொண்டு போகப் போகிறார்கள். இவர் நீடுழி காலம் வாழ்ந்தால் எப்படியும் அறம் புரிந்துகொண்டே இருப்பார். பணக்காரர் பணம் சேர்வதனால் வரும் தீங்கை அறத்தால் போக்கிக்கொள்ளலாம். அது செய்யாதவர்களுக்குப் பணம் சேரச் சேரத் துன்பமும் உடன்சேரும். பாட்டிக்கு இந்த உண்மைகள் நன்ருகத் தெரியும். அதனல் அவர்களுக்குத் துன்பம் உண்டாகட்டும் என்று சபிக்க வில்லை; இன்னும் பணம் சேரட்டும்' என்று சொன்னார்.

உவர்க்கடல் அன்ன செல்வரும் உளரே!
கிணற்றுாற் றன்ன நீயும்ஆர் உளையே:
செல்வர்தாம் பெருந்திரு வுறுக! பல்பகல்
நீவாழியரோ நெடிதே! ஈயாச் -
சிறுவிலைக் காலத் தானும்
உறுபொருள் தந்துஎம் சொற்கொள் வோயே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முந்நீர்_விழா.pdf/36&oldid=1214757" இலிருந்து மீள்விக்கப்பட்டது