பக்கம்:முந்நீர் விழா.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



கூவம் தியாக சமுத்திரம்

தொண்டை நாட்டில் உள்ள கூவம் என்னும் ஊர் பாடல் பெற்ற தலம். இன்றும் கூவம் என்ற பெயருடனேயே அது விளங்குகிறது. அதற்குத் திருவிற்கோலம் என்றும் ஒரு பெயர் உண்டு. துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் அந்தத் தலத்துக்கு ஒரு புராணம் பாடியிருக்கிறார். .

பழங்காலத்தில் அதற்குத் தியாக சமுத்திரம் என்ற பெயரும் வழங்கியது. கூவம் தியாக சமுத்திரம் என்று சேர்த்து வழங்குவதும் உண்டு. அங்கே தமிழ்ப் புலவர்களும் தமிழ்ப் புலவர்களை ஆதரிக்கும் வள்ளல்களும் இருந்தார்கள்.

இராமாயணத்தைப் பாடிப் புகழ்கொண்ட கவிச் சக்கரவர்த்தியாகிய கம்பர் ஒரு முறை தொண்டை நாட்டுக்கு வந்தார். அவருடைய வரவை அறிந்து கூவத்துப் பெருமக்கள் அவரைத் தம்முடைய ஊருக்கு வந்து சில நாள் தங்கச் சொன்னர்கள். அக்காலத்தில் தொண்டை மண்டலமும் சோழனுடைய அரசாட்சிக்கு அடங்கியிருந்தது. சோழனுடைய ஆதரவு கம்பருக்குக் கிடைக்கவில்லை. அதலனால் அவர் வடக்கே புறப்பட்டுத் தெலுங்கு நாடளவும் சென்று வந்தார்.

அக்காலத்தில் வாணியர் குலத்தில் தோன்றிய தாதன் என்ற புலவன் சோழ மன்னனுடைய பாராட்டைப் பெற்றான். அவன் கம்பர் பாட்டில் குறை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முந்நீர்_விழா.pdf/37&oldid=1214758" இலிருந்து மீள்விக்கப்பட்டது