பக்கம்:முந்நீர் விழா.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

முந்நீர் விழா

 "உங்கள் வாணியத் தாதனுடைய சிவிகையைத் தூக்கிச் செல்லாமல், இங்கே ஏன் வந்தீர்கள்?" என்று சற்றே சினக் குறிப்போடு கம்பர் கேட்டார்.

'தமிழில் எங்களுக்கு வேறுபாடு இல்லை. இராமாயணம் பாடிய திருவாயால் எங்கள் ஊரும் ஒரு பாடலாவது பெறவேண்டும் என்று ஆசைப்படுகிறோம். அதற்கு நாங்கள் செய்ததவம் போதவில்லை. இந்தச் சிவிகையைச் சுமக்கும் புண்ணியம் அந்தத் தவக்குறையை நிறைவேற்றும் என்று நம்புகிறோம்.'

கம்பருக்குச் சற்றே மணம் இளகியது. அப்போது அவர் கீழே இறங்கி ஓரிடத்தில் அமர்ந்து கொண்டிருந்தார். கூவத்திலிருந்து வந்தவர்களில் ஒருவர் நல்ல வாசனைப் பண்டங்கள் சேர்ந்த தாம்பூலத்தை அவரிடம் நீட்டினர். அதைக் கம்பர் போட்டுக்கொண்ட போது அது மிகவும் நன்றாக இருந்தது. அப்போது தான் தமக்கு அதைக் கொடுத்தவரைக் கூர்ந்து பார்த்தார். அவர் சிறந்த செல்வர் என்று அவர் தோற்றமே சொல்லியது. இவர் யார்? நமக்குத் தாம்பூலம் தருகிறாரே! என்று எண்ணிய கம்பர், "நீர் யார்?' என்று கேட்டார்.

"கூவம் தியாக சமுத்திரத்தில் தங்கள் பொன்னடி படவேண்டுமென்று தவம் செய்பவர்களில் அடியேனும் ஒருவன்' என்று அவர் பணிவுடன் கூறினார். அப்படிச் சொல்லிக்கொண்டே, மற்றோரு வெற்றிலைச் சுருளை நீட்டினார்.

"உம்மைப் பார்த்தால் வளவாழ்வு வாழ்பவராகத் தோன்றுகிறீர். இப்படி அடைப்பைச் சேவகம் செய்யலாமா?’ என்று கேட்டார் கம்பர். *

"இது செய்யக் கொடுத்து வைத்திருக்க வேண்டுமே. இராமபிரானுடைய வடிவழகையும் அருங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முந்நீர்_விழா.pdf/39&oldid=1214762" இலிருந்து மீள்விக்கப்பட்டது