பக்கம்:முந்நீர் விழா.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கூவம் தியாக சமுத்திரம்

31



குணங்களையும் பாடிய திருவாயில் சேரும் தாம்பூலத்தை அளிக்கும் பாக்கியம் எளியதா?’ என்று விடை வந்தது. உடன் இருந்தவர்கள் அடைப்பைச் சேவகம் செய்தவர் பரம்பரைச் செல்வரென்றும், இரந்தார்க்கு இல்லை யென்னாது ஈபவரென்றும் எடுத்துச் சொன்னார்கள்.

"தங்களைப் போன்ற புலவர் பெரு மக்களுக்கு முன் நான் எம்மாத்திரம்? கொடுக்கக் கொடுக்கக் குறையும் பொருளை நாங்கள் வைத்திருக்கிறோம். கொடுக்கக் கொடுக்கக் குறையாத தமிழ் தங்களிடம் இருக்கிறது. நாங்கள் கேட்பவர்களுக்குக் கொடுக்கும் பொருள் சில நாட்களுக்கே பயன்படும். தாங்கள் வழங்கும் கவியோ என்றும் நிலைத்து நின்று புகழைப் பரப்பும். நாங்கள் கொடுக்கிறொம் என்று பெயர் பெறுவதைவிடத் தங்களிடம் வந்து இரந்து நிற்பதையே பெரிதாக எண்ணுகிறோம். தக்கவர்களிடம் இல்லை என்னாமல் தம்மிட முள்ள பொருளை வழங்குபவர்களிடம் இரப்பதும் சிறந்ததே என்று திருவள்ளுவர் சொல்லியிருக்கிறார் அல்லவா? அதனால் இப்போது தங்கள் முன் வந்து இறைஞ்சி நிற்கிறோம்.'

அவர் படித்தவர் என்பதும், பண்புடையவர் என்ப தும் அவர் பேச்சால் வெளியாயின. கவிஞர் அவருடைய பணிவையும் பேச்சிலுள்ள ஆர்வத்தையும் கண்டு வியந்தார். -

"உங்கள் ஊருக்கு வருகிறேன்” என்று கம்பர் கூறியதைக் கேட்டவுடன் கூவத்துக்காரர்கள் ஆனந்தக் கூத்தாடினர்கள். வந்தவர்களில் சிலர் ஊர் சென்று, அக்கவிஞர் பெருமானை வரவேற்பதற்கு வேண்டியவற்றைச் செய்யத் தொடங்கிவிட்டனர். - - கம்பர் கூவம் சென்றார். ஊர் முழுவதும் சிவிகையில் வலம் செய்தார். அப்போது அவர் சிவிகையை ஊர்க்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முந்நீர்_விழா.pdf/40&oldid=1214764" இலிருந்து மீள்விக்கப்பட்டது