பக்கம்:முந்நீர் விழா.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

31

முந்நீர் விழா



காரர்களே சுமந்தார்கள். கம்பர் வேண்டாமென்று சொல்லியும், கேளாமல் சுமந்தார்கள். முன் சொன்ன செல்வர் அடைப்பையைச் சுமந்து வெற்றிலைச் சுருள் கொடுத்தார்.

அவர்களுடைய அன்பையும் உபசாரத்தையும் கண்ட கம்பர் உருகினார்; சில நாட்கள் அங்கே தங்கினார். அப்போது அவர்களுக்கு இருந்த தமிழார்வத்தையும் நன்றாக உணர்ந்து வியந்தார். அவ்வூரையும் ஊராரை யும் பாராட்டிச் சில பாடல்கள் பாடினர்.

பிற்காலத்தில் வந்த கவிஞர் ஒருவர் இந்த நிகழ்ச்சியைக் குறிப்பிட்டு, கூவத்தைப் பற்றி ஒரு பாடல் பாடியிருக்கிறார்,

ஓங்கிய செந்தமிழ்த் தாதற்
கடிமைஅவ் வூர்; அதனால்
நாம்கவி சொல்வதும் இல்லைஎன்
றேகம்ப நாடன்சொல்ல
ஆங்கவன் ஏறும்சிவிகை -
சுமந்தும் அடைப்பையிட்டும்
தாம்கவி கொண்டது கூவம்
தியாக சமுத்திரமே,

2

இந்தக் கூவம் தியாக சமுத்திரத்தில் ஒரு காலத்தில் நாராயணர் என்ற பெயருள்ள பொற்கொல்லர் ஒருவர் இருந்தார். அவர்தம் கலையில் வல்லவராக இருந்ததோடு தமிழ்ப் புலவர்களை வரவேற்று ஆதரிக்கும் வள்ளன்மையும் உடையவராக இருந்தார். எத்தகைய புலவராக இருந்தாலும் அவருடைய கவியைக் கேட்டு, அவரவர் தகுதிக்கு ஏற்பப் பரிசு வழங்கி வந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முந்நீர்_விழா.pdf/41&oldid=1214765" இலிருந்து மீள்விக்கப்பட்டது