பக்கம்:முந்நீர் விழா.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

முந்நீர் விழா



தாலும்-அது உங்களுக்குத்தான்' என்று கொடையாளி கூறினார். . -

புதியவர் தூண்டிலை மெல்லக் கிணற்றுக்குள் விட்டார். தூண்டிலின் முனையில் ஒரு கொக்கி இருந்தது. கிணற்றுக்குள் தூண்டிலை விட்டு அசைத்தார். ஒன்றும் அகப்படவில்லை.

'கிணற்றைச் சுற்றித் தூண்டிலின் கயிறு போகட்டும். எளிதிலே கிடைக்குமா?' என்றார் பொற்கொல்லர். சிறிது நேரம் தூண்டிலைச் சுழற்றினார், புதியவர். பிறகு ஏதோ கொக்கியில் அகப்பட்டுக் கொண்டதுபோல் இருந்தது. மெல்ல மேலே வாங்கினார். கயிறு மேலே வந்தது. இறுதியில் தூண்டில் முள்ளும் வந்தது. என்ன ஆச்சரியம்! அதில் ஒரு மீனும் இருந்தது.

வெறும் மீனா அது? பளபளப்பான மீன் உடம்பு முழுதும் தங்க நிறம் பளிச்சிட்டது. அதை எடுத்தார் தூண்டிற்காரர். அது உண்மையில் தங்கமீன்; தங்கத்தால் பண்ணிய மீன்.

"என்ன இது?' என்று அவர் வியப்புத் தாங்காமல் கேட்டார். .

உங்களுக்குத் தெரியவில்லையா?" என்று நகைத்தார் கொடையாளி.

'தங்கத்தால் செய்த மீன் அல்லவா?"

ஆம். இந்தக் கூவம், இப்போது தியாக சமுத்திரமா, அல்லவா சொல்லுங்கள்.'

தூண்டில் போட்டவர் நெஞ்சில் வியப்பும் அந்த வள்ளல்பால் பெருமதிப்பும் கரையிறந்து பொங்கின.

இது கூவம் தியாகசமுத்திரந்தான். நான் இதை உணர்ந்துகொண்டேன்' என்று வாய்விட்டுக் கூவினார்.

இந்த அற்புத நிகழ்ச்சியைத் தொண்டை மண்டலசதகம் பாராட்டுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முந்நீர்_விழா.pdf/45&oldid=1214773" இலிருந்து மீள்விக்கப்பட்டது