பக்கம்:முந்நீர் விழா.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விச்சுளிப் பாய்ச்சல்

39



கூடியிருந்தனர். பாண்டியனுடைய தேவியும் இந்த வேடிக்கையைப் பார்க்கத் தன் தோழிகளுடன் வந்திருந்தாள். அரண்மனை முற்றத்தில் பரந்த வெளியில் தொண்ணுாற்றாறடிக் கம்பம் ஒன்றை நட்டிருந்தார்கள். விளையாட்டரங்கைச் சுற்றிக் கயிறு கட்டினார்கள். அந்தப் பெண்மணியோடு முரசறையும் இளம் பையனும் வேறு சிலரும் இருந்தார்கள். அவர்கள் அந்தக் கயிற்று வட்டத்துக்குள் இருந்து தமக்குரிய வேலைகளைச் செய்தார்கள். -

கழைக்கூத்தியின் விளையாட்டு மாத்திரமன்றி அவள் அழகும் ஆடவர் கண்களைக் கவ்வுவதை யாவரும் உணர்ந்தார்கள். அங்கே வந்திருந்த பெண்மணிகளும் அதுபற்றிப் பேசிக்கொண்டார்கள். பாண்டியன் மனைவி யும் அவள் அழகைக் கவனித்தாள். அவள் அந்தப் பெண்ணையும் அவள் விளையாட்டையும் பார்த்ததோடு, அடிக்கடி பாண்டிய மன்னனையும் பார்த்தாள். பெண் இயல்பு இது, அவன் கண்கள் சிறிதும் வேறு பக்கம் திரும்பாமல் கம்பத்திலேயே இருந்ததை அரசி கவனித்தாள். கழைக்கூத்தியையே அந்தக் கண்கள் விடாமல் சுற்றின என்பதை உணர்ந்தாள். அவளுக்கு ஏதோ குழப்பம் உண்டாயிற்று. பாண்டியன் பார்வையைத் தன்னிடம் திருப்ப எண்ணினுள். அவன் அமர்ந்திருந்த ஆசனத்துக்கு அருகில் வந்து அமர்ந்தாள்.

ஒவ்வொரு விளையாட்டின் முடிவிலும் அங்கே கூடியிருந்த மக்கள் தம்முடைய வியர்ப்புணர்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர். அரசனோ வியப்பே வடிவமாக அமர்ந்திருந்தான்.

பல விளையாட்டுக்களை அந்தப் பெண் செய்து காட்டினாள். இனி விச்சுளிப் பாய்ச்சல் ஒன்றுதான் எஞ்சியிருந்தது. அதற்கு வேண்டிய ஆயத்தங்களைச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முந்நீர்_விழா.pdf/48&oldid=1214777" இலிருந்து மீள்விக்கப்பட்டது