பக்கம்:முந்நீர் விழா.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

முந்நீர் விழா


அரசி ஊடலால் குமுறினாள். அவள் கம்பத்தைப் பார்க்கவில்லை. தனக்குத் தீங்கு செய்ய வந்திருக்கும் அந்தப் பாதகியைப் பார்க்க அவளுக்கு வெறுப்பாக இருந்தது. பாண்டியனையே தான் அவள் பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் தன் பார்வையைச் சிறிதளவும் சிதறவிடாமல் கழைக் கூத்தியின் மேல் பதித்திருந்தான்.

தான் அருகில் இருக்கத் தன்பால் சிறிதும் கண்ணை ஒட்டாமல் அந்தப் பெண்ணுக்கே அவன் தன் பார்வையை உரியதாக்கி விட்டானே! இது இனி நிகழப் போகும் நிகழ்ச்சிக்கு அறிகுறியோ? வாழ்க்கையிலேயே அவன் தன்னைப் பாராமல், அந்த வஞ்ச மகளையே பார்த்துக்கொண்டு இருந்து விடுவானே? - அரசியின் மனம் ஐயம் என்னும் தூணை நட்டு, அதில் தலைகீழாக விளையாடிக்கொண்டிருந்தது. அது விளையாட்டா? வினை அல்லவா? -

கழைக்கூத்தி இதோ பாயப் போகிறாள். கீழே நின்றவர்கள் படுதாவை விறைப்பாகப் பிடித்தார்கள். மோதிரத்தை வைத்திருந்தவன் அதை வீசிவிட்டான். ஒரே கணந்தான். அதற்குள் என்ன அற்புதம் நிகழ்ந்து விட்டது கம்பத்தின் உச்சியில் இருந்தவள் பாய்ந்தாள். அவள் மோதிரத்தை எப்படிப் பற்றினாள் என்பதைக் கவனிக்க முடியவில்லை. கம்பத்தின் நடுப் பகுதியில் அவள் மறுபடியும் தொத்திக் கொண்டாள். இப்போது அவள் கையில் மோதிரம் இருந்தது. யாவரும் ஒரே ஆரவாரம் செய்தார்கள்.

ஆனால், பாண்டியன் அதைப் பார்க்கவில்லை. உள்ளத்திலே எழுந்த பேரலைகளை அடக்க ஒண்ணாமல் திணறிக் கொண்டிருந்த அரசி சற்றே கம்பத்தின் அடியைப் பார்த்தாள். மோதிரத்தோடு நின்றுகொண்டிருந்த ஆள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முந்நீர்_விழா.pdf/51&oldid=1207489" இலிருந்து மீள்விக்கப்பட்டது