பக்கம்:முந்நீர் விழா.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விச்சுளிப் பாய்ச்சல்

51



போகின்ற புள்ளினங் காள்,புழற்
கோட்டம் புகுவதுண்டேல்
சாகின் றனள்ளன்று சொல்லீர்
அயன்றைச் சடையனுக்கே

என்று பாடினாள். 'பெரிய குன்றைப் போன்ற பொலிவு. பெற்ற தோளுடையானாகிய பாண்டிய அரசன், பெருமையையுடைய கரும்புப்பாகு என்று உவமை கூறும் சொல்லையுடைய தன் தேவியைப் பார்த்ததனால் விச்சுளிப் பாய்ச்சல் பாய்ந்த என்னைப் பார்க்கவில்லை. மெல்ல மெல்லப் பறந்து போகின்ற பறவைக் கூட்டங்களே, நீங்கள் புழற்கோட்டம் போவதாக இருந்தால் அயனம் பாக்கத்தில் உள்ள சடையனுக்கு (உனக்கு வேண்டிய இன்னாள் பாண்டியன் கட்டளையினால்) சாகின்றாள் என்ற செய்தியைச் சொல்லுங்கள்' என்ற பொருள் உடையது அது.

*

பாட்டை மீட்டும் கேட்ட பாண்டியன் அயன்றைச் சடையனாரைப்பற்றி விசாரித்தான். அவ்வள்ளல் புலவர்கள் எதைக் கேட்டாலும் தருபவர் என்பதை அவர்கள் வாயிலாக உணர்ந்து கொண்டான். கழைக்கூத்திக்குப் பரிசுகளை அளித்து அனுப்பினான். அவள் ஊரை. விட்டுப் போனாலும் அவன் உள்ளத்தை விட்டுப் போக வில்லை. 'ஒரு கழைக்கூத்திக்கு இத்தனை புலமை இருக்கிறதே!' என்று எண்ணி எண்ணி வியந்தான். அவளுடைய உள்ளம் வாடும்படி தான் செய்த காரியத்தை நினைந்து நாணினான். இத்தகைய கலைஞர்கள் உயிர் விடும் போதும் மறவாமல் நினைக்கும் வண்ணம் இருக்கும் செல்வரைப் பற்றிப் பின்னும் விரிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முந்நீர்_விழா.pdf/60&oldid=1207540" இலிருந்து மீள்விக்கப்பட்டது