பக்கம்:முந்நீர் விழா.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

முந்நீர் விழா

 அரசனாக இராமல் இருந்தால் அவன் உடனே தொண்டை நாடு சென்று, அயனம்பாக்கத்தை அடைந்து, சடையனாரைப் பார்த்து அளவளாவியிருப்பான். இப்போது, அவன் வேண்டுமானால் அவரை வருவிக்கலாம். ஆனால், முன் பழக்கம் இல்லாமல் நெடுந் தூரத்தில் தொண்டை நாட்டில் உள்ளவரை எப்படி அழைப்பது?

கடைசியில் அவனுக்கு ஓர் எண்ணம் தோன்றியது. "நம்முடைய அவைக்களப் புலவர்களைத் தொண்டை நாட்டுக்கு அனுப்பி, அவருடைய இயல்புகளைத் தெரிந்து கொண்டு வரச் செய்யலாம்" என்பதே அவன் நினைப்பு.

பாண்டியனும் தமிழ் ஆர்வமுடையவன்; தமிழ்ப் புலவன்; கவிஞன். ஆகவே, தமிழ் தெரிந்தவர்கள் என்ன தொழில் செய்தாலும் அளவற்ற அன்பு பாராட்டும் அயன்றைச் சடையனாரைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் அவனுக்கு எழுந்தது.

இரண்டு புலவர்களை அழைத்து, "நீங்கள் தொண்டை நாட்டில் புழற்கோட்டத்தில் உள்ள அயன்றைக்குச் சென்று அங்குள்ள வேளாண் செல்வராகிய சடையனாரைக் கண்டு அவர் இயல்பை அறிந்து வாருங்கள்” என்று கூறிப் பாண்டியன் அனுப்பினான். அப்படியே அவர்கள் புறப்பட்டார்கள். பாண்டி நாடும் சோழ நாடும் கடந்து தொண்டை நாட்டை அடைந்து புழற்கோட்டத்துக்கு வந்தார்கள்.

அயனம்பாக்கத்துக்குப் போய்ச் சடையனாரை அவர்கள் கண்டார்கள். பாண்டியனுடைய அன்பிலே ஊறிய அப் புலவர்களுக்கு ஒரு பைத்தியக்கார யோசனை தோன்றியது. 'யாரும் செய்வதற்கு மறுக்கும் காரியம் ஒன்றைச் செய்யும்படி நாம் கேட்டுக் கொள்வோம். புலவரின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முந்நீர்_விழா.pdf/61&oldid=1207542" இலிருந்து மீள்விக்கப்பட்டது