பக்கம்:முந்நீர் விழா.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

முந்நீர் விழா


அவனுக்குச் சடையனார் பால் பெருமதிப்பு உண்டாயிற்று. தான் மன்னனாக இருந்தாலும் நல்லவர் இயல்பைச் சொல்வது நலம் என்று கருதி, அயன்றைச் சடையனாரைப் பாராட்டி ஒரு பாடல் பாடினான். அந்தப் பாட்டைக் கேட்டால் ஒருகால் சடையனார் தன்னை நாடி வரலாம் என்பது அரசன் எண்ணம். 'நம்மை ஆதரிக்கும் உபகாரிகள் யார் இருக்கிறார்கள்?' என்று தேடும் புலவர்களையும், பிறரிடம் இரந்து வாழ்வு நடத்தும் ஏழைகளையும் பார்த்து, "நீங்கள் பெரிய செல்வத்தை அடையலாம். அயன்றைச் சடையனிடம் இருப்பது எதுவானாலும் கேளுங்கள். மற்ற இடங்களில் கிடைக்காததையும் கேளுங்கள். அவன் தந்து விடுவான்" என்று சொல்லும் வகையில் அந்தப் பாடல் அமைந்தது.

இரவ லாளரே, பெருந்திரு உறுக!
அரவுமிழ் மணியும் அலைகடல் அமுதும்
சிங்கப் பாலும் திங்கட் குழவியும்
முதிரை வாலும் குதிரை மருப்பும்
ஆமை மயிரும் அன்னத்தின் பேடும்
ஈகென இரப்பினும் இல்லென அறியான்;
சடையன அயன்றைத் தலைவனே
உடையது கேண்மின் உறுதிஆ ராய்ந்தே.

(பிறரிடம் பொருளைப் பெறும் இயல்புடையவர்களே, நீங்கள் பெரிய செல்வத்தை அடைவீர்களாக! நாகப்பாம்பு உமிழ்கின்ற மணியையும், அலைவீசுகின்ற கடலில் பிறந்த அமுதத்தையும், சிங்கத்தின் பாலையும், பிறைச் சந்திரனையும், துவரையின் வாலையும், குதிரைக் கொம்பையும், ஆமை மயிரையும், பெண் அன்னத்தையும் கொடுப்பாயாக என்று கேட்டாலும், இல்லை என்று சொல்லத் தெரியாதவனாகிய சடையனை, அயன்றை என்னும் ஊரிலுள்ள செல்வனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முந்நீர்_விழா.pdf/65&oldid=1207551" இலிருந்து மீள்விக்கப்பட்டது